Also Watch
Read this
By: Fyrose Banu

விருத்தாசலம் நகராட்சியின் அலட்சியபோக்கு காரணமாக 19 வயது வார்டு முழுவதும் குப்பை கிடங்காக மாறிவரும் அவலம் ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட 19 வது வார்டுக்கு சரிவர குப்பைகளை வாங்கி செல்வதற்கு குடியிருப்பு பகுதிகளுக்கு தூய்மை பணியாளர்கள் வருவதில்லை என்றும், அப்படியே வந்தாலும் குப்பைகளை சேகரித்து ஓர் இடத்தில் மூட்டையாக கட்டி வைத்து சென்று விடுவதாக குடியிருப்பு வாசிகள் குற்றச்சாட்டு வைத்தனர்.
விநாயகர் சிலை வைத்தாலாவது இங்கே குப்பைகளை கொட்டாமல் இருப்பார்கள் என்று தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது மழை தொடங்கியதால் தேக்கி வைக்கப்பட்டுள்ள குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், தற்போது பன்றி காய்ச்சல், பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் விருத்தாசலம் நகராட்சி நிர்வாகம் இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். மேலும் விருத்தாசலம் நகராட்சியின் அலட்சியப் போக்கால், 19 வது வார்டு முழுவதும் குப்பை கிடங்காக மாறிவரும் அவலம் ஏற்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குடியிருப்பு வாசிகள் குற்றச்சாட்டு வைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved