Also Watch
Read this

வரலாறு தெரியாத இளைஞர்களால் தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றம் ஏமாற்றமாக மாறி இருப்பதாக, தவெக ஆட்சியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடினார். லட்சக்கணக்கான மக்கள் செய்த தவறு, கோடிக்கணக்கான மக்களை துன்புறுத்தி கொண்டு இருப்பதாகவும் இந்த நிலை மாற வருங்காலத்தில் சிந்தித்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

திருமண விழாவில் மு.க.ஸ்டாலின்
சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற திருமண விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;
ஒரு டாக்டர் குடும்பத்தில் நடைபெறக்கூடிய திருமணம். டாக்டர்கள் சேர்ந்து ஒன்றாக செய்யக்கூடிய திருமணமாக பார்க்கப்படுகிறது. இதுபோன்று பட்டதாரிகள், அத்தி பூத்தார் போல தான், சில குடும்பத்தில் இருப்பார்கள். ஊருக்கு ஊர் கிராமத்துக்கு கிராமம் வீட்டுக்கு வீடு பட்டதாரிகள் இருக்கிறார்கள் என்று சொன்னால், திராவிட இயக்கம் தான் காரணம் என்பதை மறந்து விடக்கூடாது. இந்த நிலைக்கு வருவதற்கு காரணம் யார்? என்பதை இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு புரியவில்லை, தெரியவில்லை.

மாற்றம், ஏமாற்றம்
அதனால் தான், ஆ.ராசா சொன்னது போல், ஒரு மாற்றம் தமிழ்நாட்டில் ஏற்பட்டு, ஏமாற்றமாக மாறி இருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் செய்த தவறு கோடிக்கணக்கான மக்களை துன்புறுத்தி கொண்டு இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.

இந்த திருமண விழாவில் கலந்து கொண்டிருக்கும் நீங்கள் வருங்காலத்தில் சிந்தித்து செயல்பட வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன். குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர் சூட்டுங்கள்.
இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved