news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

இது சட்டசபையா, சண்டை சபையா? பிரேமலதா கேள்வி

இதனால் மக்களுக்கு என்ன பயன்?

2

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழக சட்டசபையில், எப்போதுமே சண்டை இட்டால் எப்படி? என்று பிரேமலதா கேள்வி எழுப்பி உள்ளார். ஆட்சிக்கு வந்துள்ள த.வெ.க. மக்களுக்கு நன்மை செய்யும் பணிகளில் ஈடுபட வேண்டுமென்றும் வலியுறுத்தி உள்ளார்.

தமிழக சட்டசபையில்...
தமிழக சட்டப்பேரவையில், தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா பேசியதாவது;
மானிய கோரிக்கையை தவிர, மற்ற எல்லாம் நடக்கிறது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டையும் தான் சொல்கிறேன். இருவரும் மாறி மாறி குறை சொல்வதால், சட்டப்பேரவை மாலை 6 மணி வரை செல்கிறது. இதனால் மக்களுக்கு என்ன பயன்?

மாணவர்கள் கூட தேர்வுக்கு இவ்வாறு தயாராக மாட்டார்கள். ஆனால், சட்டப்பேரவை உறுப்பினர்கள் இரவு பகலாக தயாராகி வருகிறார்கள். மக்களுக்காக பேச வேண்டும். வாக்குவாதம் செய்யலாம். ஆனால், 24 மணி நேரமும் சண்டைதான் போடுகிறார்கள்.

கவலை தருகிறது...
சபாநாயகர் அனைவருக்கும் வாய்ப்பு தர வேண்டும். பேசியவர்களும், சண்டை போட்டவர்களும் தான் திரும்பத் திரும்ப பேசுகிறார்கள்.

இதனால் தமிழகத்துக்கு என்ன பயன்? ஆண்ட கட்சிகள் அவரவர்களால் முடிந்த அளவுக்கு நல்லதுதான் செய்து உள்ளனர்.

தற்போது தவெகவுக்கு மக்கள் வாய்ப்பளித்து உள்ளனர். மக்களுக்கு நல்லது நடக்கதான் சட்டப்பேரவை நடக்கிறது. இது மாதிரியான விஷயங்கள் கவலையளிக்கிறது.
இவ்வாறு பிரேமலதா கூறி உள்ளார்.

Related Link
ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை vs லாட்டரி மருமகன்

ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை vs லாட்டரி மருமகன்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இது சட்டசபையா, சண்டை சபையா? பிரேமலதா கேள்வி

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved