news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

ஜான்வி கபூர்க்கு மேரேஜ் ஆயிடுச்சா?

Bridal AD

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜான்வி கபூர்

ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த  ஜான்வி கபூர்

பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர், ராம் சரணோட இணைஞ்சு நடிச்ச பெத்தி படம் அண்மையில் வெளியாகி இருந்துச்சு. படத்துக்கு பெரிய எதிர்ப்புகள் இருந்தாலும் கமெர்ஷியலா சக்சஸ் கொடுத்து இருக்குன்னே சொல்லலாம்.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள்ல பிசியா நடிச்சிட்டு வரும் ஜான்வி கபூரோட வீடியோ ஒண்ணு வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கு. இஸ்டாவுல பகிரப்பட்டிருக்கற அந்த வீடியோவுல நடிகர் இஷான் கட்டருடன் சேர்ந்து இருக்காங்க, ஜான்வி கபூர்.

மேரேஜ் தீம் மற்றும் காஸ்டியூம்ல இருக்கற அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஜான்வி கபூருக்கு சத்தமே இல்லாம மேரேஜ் ஆகிடுச்சான்னு கேள்வி எழுப்பிட்டு வந்தாங்க. ஆனா, ஜான்வி கபூரும், இஷான் கட்டரும் கல்கி ஃபேன்ங்கற நிறுவனத்தோட பிரைடல் விளம்பரத்துக்காக நடிச்சு இருக்கறது இப்போ தெரிய வந்து இருக்கு.

அவெஞ்சர்ஸ் எண்ட்கேமில் விஜய்சேதுபதி!

மார்வல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் ரசிகர்களுக்காகவே மறுபடியும் ரீ ரிலீசாக இருக்குற படம்தான் Avengers Endgame: Encore. உலகம் முழுக்க அவஞ்சர்ஸ் ரசிகர்களால அதிகம் எதிர்பார்க்கப்படுற அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே டிசம்பர்ல ரிலீசாக இருக்கற நிலையில அதுக்கு முன்னதாடியே செப்டம்பர் மாசம் 25ம் தேதி Avengers Endgame: Encore படம் ரீீ ரிலீஸ் செய்யப்படுது.

ரீ-கிரியேஷன்ல வர்ற Avengers Endgame: Encore படத்துக்காக தமிழ்ல விஜய் சேதுபதி டப்பிங் பேசி இருக்காரு. Avengers Endgame: Encore படத்தோட தமிழ் வெர்ஷன் டிரெய்லர்ல அயர்ன் மேன் டோனி ஸ்டார்க் கேரக்டருக்கு விஜய் சேதுபதி டப்பிங் பேசி இருக்கறது டிரோலாகிட்டு வருது.

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா பட ரிலீஸ் தேதி

ராகுல் சாங்கிரித்யான் இயக்கத்துல விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிச்சு இருக்கற படம் ரணபலி. ஹிஸ்டாரிக்கல் ஜானர்ல உண்மை கதையை மையமா வெச்சு உருவாகி இருக்கும் ரணபலி படத்தோட ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்ப பெற்று இருந்துச்சு.

இதுக்கும் மேல இந்த படத்துல ஹாலிவுட்ல மம்மி படத்துல வில்லனா நடிச்சு மிரட்டுன அர்னால்ட் வோஸ்லூ விஜய் தேவரகொண்டாவோட சேர்ந்து நடிக்கறதா வெளியான தகவலும் பரபரப்பா பேசப்பட்டது. ரணபலி படத்துக்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்துட்டு வர்ற நிலையில, படத்தோட ரிலீஸ் தேதிய படக்குழு அறிவிச்சு இருக்காங்க. அக்டோபர் 16ம் தேதி ரணபலி ரீலீஸாகப் போகுது.

Related Link
சன்னி லியோன் ஏமாத்தினாரா?

சன்னி லியோன் ஏமாத்தினாரா?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓணம் பண்டிகையையொட்டி ஓணவில் சமர்ப்பிக்கும் நிகழ்வு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved