Also Watch
Read this
By: Manigandan Raja

திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஓணப்பண்டிகை நாளில் ஓண வில் சமர்ப்பிப்பது வழக்கம். இது மன்னராட்சி காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது. ஓண நாளில் மாலையில் ஆதிகேசவப்பெருமாள் மற்றும் கிருஷ்ணன் உருவம் வரையப்பட்டு வர்ணம் பூசப்பட்ட ஓண வில்களை பட்டுத்துணியில் மூடி தென்மேற்கு மூலையில் வைப்பார்கள். ஆதிகேசவபெருமாள் மற்றும் ஸ்ரீகிருஷ்ணன் ஸ்ரீபலி பூஜை நடைபெறும்போது, அந்த வில்கள் சமர்பிக்கப்படும்.
இந்நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. ஓணவில்களை தயாரித்த தச்சர் சுரேஷ் பாபு சுவாமி முன்பு அவைகளை சமர்பித்தார். பின்னர் அர்ச்சகர்கள் 28 ஓணவில்களை ஏந்தி ஸ்ரீபலி விக்கிரகங்கள் அருகில் சென்றனர். இதையடுத்து ஸ்ரீ பலி விக்கிரகங்களுடன் மேள தாளம் முழங்க ஓணவில்களுடன் கோவில் பிரகாரத்தைச்சுற்றி வந்தனர்.
தொடர்ந்து ஓணவில்கள் கிருஷ்ண சாமி சன்னதியிலும், ஆதிகேசவப்பெருமாள் கருவறையில் வைக்கப்பட்டது. பின்னர் தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பெண்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மேலும் கோவில் பிரகார விளக்கணி மாடத்துக்கு ஒளியேற்றும் லட்சதீப விழா நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் மேலாளர் மோகனகுமார் மற்றும் பணியாளர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved