news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மகாநாட்டு மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா
tv

Also Watch

மகாநாட்டு மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா

கரடிசித்தூர்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே உள்ள கரடிசித்தூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள மகாநாட்டு மாரியம்மன் கோவில் கோவில் தேர் திருவிழா கடந்த 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

விழாவையொட்டி தினந்தோறும் பாரதம் படித்தல், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. மேலும், கூழ் வார்த்தல், அம்மன் வீதி உலா, கழுமரம் ஏறுதல், காளி கோட்டை இடித்தல் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றன.

விழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி, மகாநாட்டு மாரியம்மன் க்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்ளிட்ட பல்வேறு நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து, திரளான பக்தர்கள் பக்தி முழக்கங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர் திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

Related Link
அமைச்சர் கீர்த்தனாவை கண்டித்து மக்கள் போராட்டம்

அமைச்சர் கீர்த்தனாவை கண்டித்து மக்கள் போராட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

யமஹாவின் Blast அறிமுகம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved