Also Watch
Read this
By: Manigandan Raja

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனம் நிலக்கரி வெட்டி எடுத்து மின்சாரம் தயாரித்து வருகிறது இந்த நிலையில் நெய்வேலி என்எல்சி நிறுவனம் சுரங்கம் பணிகளுக்காக அருகே உள்ள வளையமாதேவி கத்தாழை கரிவெட்டி மும்முடி சோழகன் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான இயக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தி சுரங்க விரிவாக்க பணிகளை மேற்கொண்டு நிலக்கரி வெட்டி எடுத்து மின் உற்பத்தி செய்து வருகிறது.
இந்த நிலையில் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடும் வேலைவாய்ப்பும் வாழ்வாதாரமும் வழங்காமல் இழுத்தடித்து வருகிறது மேலும் என்எல்சி நிறுவனத்தை கண்டித்து பாதிக்கப்பட்ட கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக சட்டசபையில் புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி விருதாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்தால் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா என்எல்சி நிர்வாகம் விவசாயிகளின் பிரச்சனை அனைத்தும் தீர்த்து விட்டதாகவும் தொடர்ந்து படிப்படியாக விவசாயிகளின் பிரச்சனை தீர்க்கப்பட்டு வருவதாகவும் என்எல்சி கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடும் வாழ்வாதாரமும் வேலை வாய்ப்பு வருவதாகவும் குறிப்பிட்டார் மேலும் பாலிசியை தொடர்ந்து செயல்படுத்துவதாகவும் அமைச்சர் கீர்த்தனா பதிலளித்தார்.
இதற்கு சட்டசபையிலேயே புவனகிரி எம்எல்ஏ அருண்மொழிதேவன் உண்மைக்கு புறம்பான தகவலை அமைச்சர் கீர்த்தனா சட்டசபையில் தெரிவிப்பதாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்று
வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட சுமார் ஐந்து இருக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி உண்மைக்கு புறம்பான தகவலை சட்ட சபையில் கூறும் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவுக்கு எதிராக கண்டன கோஷங்களை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் எனர்ஜி நிறுவனம் எங்கு உள்ளது? அதன் செயல்பாடு என்ன அடிப்படை பிரச்சனைகள் என்ன விவசாயிகளின் பிரச்சனைகள் என்ன என அடிப்படை தெரியாமல் அமைச்சர் கீர்த்தனா சட்டசபையில் என்எல்சி நிறுவனம் எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்ட் படிப்பதாகவும் உடனடியாக கீர்த்தனா எனர்ஜியால் பாதிக்கப்பட்ட கிராமங்களை நேரில் ஆய்வு செய்து அதன் பிறகு உண்மைத்தன்மையை அறிய வேண்டும் எனவும் குறிப்பிட்டு பேட்டி அளித்தனர்.
மேலும் தொடர்ந்து என்எல்சி நிறுவனத்திற்கு ஆதரவாக அமைச்சர் கீர்த்தனா செயல்பட்டால் தமிழக அரசுக்கு எதிராகவும் அமைச்சர் கீர்த்தனாக்கு எதிராகவும் என்எஸ்சியால் பாதிக்கப்பட்ட
கிராம மக்கள் ஒன்று கூடி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என எச்சரிக்கை விடுத்தனர் மேலும் என்எல்சி இன் சி எஸ் ஆர் நிதி பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளுக்கு செலவழிக்கப்படாமல் வட மாநிலங்களில் செலவழிக்கப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
தலைமுறை தலைமுறையாக என்எல்சி நிறுவனத்தால் பல்வேறு வாழ்வாதார சிக்கல்களை சந்தித்து வருவதாகவும் சொந்த மண்ணிலேயே என்எல்சி நிறுவனத்தால் நாங்கள் அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளோம் எனவும் இதனை எல்லாம் புரிந்து கொள்ளாமல் என்எல்சி நிறுவனம் விவசாயிகளின் பிரச்சனையை தீர்த்து விட்டது என்று உண்மைக்கு புறமான தகவலை சட்டமன்றத்தில் அமைச்சர் கீர்த்தனா கூறுவது விவசாயிகளை வேதனையில் ஆற்றுவதாகவும் தெரிவித்தனர்.
என்எல்சி நிறுவனத்துக்கு ஆதரவாக அமைச்சர் கீர்த்தனா சட்டசபையில் உரையாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திடீரென அமைச்சருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved