Also Watch
Read this
By: Manigandan Raja

ராமநாதபுரம் ஸ்ரீராம் நகரில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ சமயபுரத்து ராஜ முத்து மாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா கடந்த 16ஆம் தேதி காப்பு கட்டுடன் தொடங்கியது. ராஜ முத்துமாரி அம்மனுக்கு பக்தர்கள் முத்துபரப்பி வளர்த்து வந்தனர்.
தொடர்ந்து பத்து நாட்கள் இராஜமுத்து மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனை சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில் நிறைவு நாளான இன்று முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. காப்பு கட்டிய நாள்முதல் விரதமிருந்த பக்தர்கள் முளைப்பாரியை தலையில் சுமந்து ஊர்வலமாக எடுத்து வந்து தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.

நகரின் முக்கிய வீதிகளில் வழியாக மேளதாளம் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலத்தில் மூன்று வயது சிறுமி பட்டாடை அணிந்து முளைப்பாரியை சுமந்து வந்தது
நேர்த்திகடனை செலுத்தினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved