Also Watch
Read this
By: Manigandan Raja

அருணாச்சல பிரதேச சிறுமி டிங்கிள் கம்பீரமாகப் பேசிய வீடியோ
எங்களை இந்தியர் என்று அழையுங்கள் எனப் பேசி வைரலான அருணாச்சல பிரதேச சிறுமி டிங்கிளிடம் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வீடியோ காலில் பேசி அவரை பாராட்டினார். ஒட்டுமொத்த இந்தியாவும் சிறுமியை நேசிப்பதாகவும், அவர் மிகவும் பிரபலமாகிவிட்டதாக கூறி உரையாடினார்.
தன்னை 'சீனர்' எனக் குறிப்பிட்டவர்களுக்கு, "நாங்கள் இந்தியர்கள், எங்களை இந்தியர் என்றே அழையுங்கள்" என அருணாச்சல பிரதேச சிறுமி டிங்கிள் கம்பீரமாகப் பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது.
வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை
உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் தொடர் மழை மற்றும் நிலச்சரிவில், ஜோஷிமத் - மார்வாரி பாலத்திற்கு முன்னே ((Joshimath-Marwari Bridge))பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இரு திசைகளிலும் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், யாத்ரீகர்களும் உள்ளூர் மக்களும் ஆங்காங்கே வாகனங்களுடன் சிக்கித் தவித்து வருகின்றனர். போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஒரே நாளில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த விவாகரம்
மேற்கு வங்கம் மால்டா அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த விவாகரத்தில் மாநில சுகாதாரத் துறை மருத்துவமனை நிர்வாகத்திடம் விரிவான அறிக்கை கோரி உள்ளது.அந்த மருத்துவமனையில் இந்த மாதத்தில் மட்டும் மொத்தம் 60 குழந்தைகள் உயிரிழந்ததாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved