Also Watch
Read this
By: Manigandan Raja

மனைவி ஆர்த்தி இணையத்தில் பகிர்ந்த புகைப்படங்கள்
நடிகர் சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதியினரின் 16-வது திருமண நாள் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த தம்பதி 2010 ஆகஸ்ட் 27-ம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில், ஆராதனா என்ற மகளும், குகன், பவண் என 2 மகன்களும் உள்ளனர். இந்த சூழலில், இந்த தம்பதியினர் தங்களது 16-வது திருமணநாளை கோலாகலமாக கொண்டினர்.
MGR Film city-ல் அரங்க வாடகை குறைப்பு
MGR Film city-ல் சினிமா சூட்டிங்கிற்கான அரங்க வாடகை கட்டணங்கள் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதியுடன் கூடிய டைப் ஏ கிரிட் 1 தளத்துக்கான வாடகை ஒரு லட்சம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாகவும், டைப் பி1, பி2 கிரிட் 2, 3 தளங்களுக்கான வாடகை 80 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, குளிர்சாதன வசதி இல்லாத படப்பிடிப்பு தளத்துக்கான வாடகையும் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved