news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

புழல் சிறையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு

காவல் நிலையத்திலும் முதல்வர் ஆய்வு

36

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையை அடுத்த புழல் சிறையில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டு, மத்திய சிறையை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

புழல் காவல் நிலையத்திலும் ஆய்வு செய்த பின்னர், சாலையில் திரண்டிருந்த மக்களை நோக்கி, கைகளை அசைத்து வாழ்த்துக்களை ஏற்றார்.

சிறைவாசிகளிடம் குறை கேட்பு
இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், புழல் மத்திய சிறைச்சாலைக்கு நேரில் வந்து சிறைவாசிகளுக்கான அடிப்படை வசதிகளை ஆய்வுசெய்து, சிறைவாசிகளிடம் தேவைகள் குறித்துக் கேட்டறிந்தார். சிறைவாசிகளுக்கான அடிப்படை வசதி, அவர்களுக்கு வழங்கப்படும் உணவு, மருத்துவ வசதி, சிறைவாசிகளுக்கான தொழிற்கூடம் ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வுசெய்ததோடு, சிறைவாசிகளிடம் அவர்களது தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

சிறையில் ஆய்வு
புழல் மத்திய சிறைச்சாலையானது இந்தியாவின் மிகப்பெரிய சிறை வளாகங்களில் ஒன்றாகும். தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று, ஆகஸ்ட் 28ஆம் தேதி, புழல் மத்திய சிறைச்சாலைக்கு நேரில் வந்து புழல் மத்திய சிறை-1ல் அமைந்துள்ள தொற்றுத் தடை காப்புப் பகுதி, பார்வையாளர்கள் அறை, மருத்துவமனை, போதை ஒழிப்பு மறுவாழ்வு மையம், மகாத்மா காந்தி சமுதாயக் கல்லூரியிலுள்ள வகுப்பறை, நூலகம் மற்றும் மேம்பட்ட கணினி பயிற்சி மையம், உயர் பாதுகாப்புத் தொகுதி, தூக்கு மேடைப் பகுதி ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

உணவின் தரம்
சிறைவாசிகளுக்கான தொழிற்கூடத்திற்கு நேரில் சென்று அங்கு தயாரிக்கப்படும் காய்கறி வைப்பதற்கான இரும்பு அடுக்குச் சட்டகங்கள், காகித உறைகள், அலுவலகக் கோப்பு அட்டைகள் போன்றவற்றையும், விசைத்தறிக் கூடத்தில் தயாரிக்கப்பட்ட போர்வை போன்ற பல்வேறு பொருட்கள் மற்றும் தையற்பிரிவு ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு,

சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வுசெய்து. சிறைவாசிகளிடம் அவர்களது தேவைகள் குறித்துக் கேட்டறிந்தார்.

காவல்நிலையத்தில் ஆய்வு
தொடர்ந்து. M-3 புழல் காவல் நிலையத்திற்கு முதலமைச்சர் நேரில் சென்று. காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து காவல் ஆய்வாளரிடம் கேட்டறிந்து, பதிவேடுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், காவல் உதவி ஆய்வாளர் அறை, 2 கணினி அறை, கைதி அறை ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது. சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை இயக்குநர், காவல்துறை இயக்குநர் டாக்டர் சந்தீப் ராய் ராத்தோர், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் சென்னை சரகத் துணைத் தலைவர் முனைவர் த.பழனி, கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related Link
சட்டப்பேரவையில் ஓங்கி ஒலித்த News Tamil 24x7 பெயர்

சட்டப்பேரவையில் ஓங்கி ஒலித்த News Tamil 24x7 பெயர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கனடாவில் இருந்து ஸ்பெயினுக்கு அனுப்பப்பட்ட திமிங்கலங்கள்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved