Also Watch
Read this
By: Manigandan Raja

கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கல்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சிவன் மார்க்கண்டேயர் உயிரைக் காப்பாற்றுவதற்காக கால சம்ஹாரம் மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்து மீண்டும் உயிர்ப்பித்த தலம்.
மார்க்கண்டேயர்க்கு என்றும் சிரஞ்சீவி என்ற வரம் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு புராண வரலாறு கொண்ட கோயிலில் வருடம் 365 நாட்களும் பக்தர்கள் ஆயுள் விருத்தி வேண்டி சஷ்டியப்த
பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் உள்ளிட்ட திருமணங்கள் யாகங்கள் செய்து வழிபாடு நடத்தி செல்கின்றனர். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் பிரபலம் திரை பிரபலம் என அனைத்து துறையை சார்ந்த முக்கியஸ்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் கோயிலுக்கு திரைப்பட நடிகர் சமுத்திரக்கனி தனது உறவினர் இல்ல நிகழ்வில் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தார். சமுத்திரகனியை பார்த்த பக்தர்கள் பலர் ஆர்வத்துடன் அவருடன் பேசி சென்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
"Avengers: Endgame ரீ-ரிலீஸை பார்ப்பது அவசியம்"
AVENGERS: DOOMSDAY படத்தை புரிந்துக்கொள்ள AVENGERS: ENDGAME ரீ-ரிலீஸ் படத்தை பார்ப்பது அவசியம் என இயக்குநர் ஜோ ரூசோ தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் 25ம் தேதி வெளியாகவுள்ள ENDGAME படத்தின் புதிய பதிப்பு, DOOMSDAY-வுக்கு ஒரு இயற்கையான தொடர்ச்சியாகவும் பாலமாகவும் அமையும் எனக் கூறியுள்ளார்.
துல்கர் சல்மான் நடித்த “ஐ அம் கேம்” திரைப்படம்
துல்கர் சல்மான் நடித்த ‘ஐ அம் கேம்’ திரைப்படத்தின் 2வது பாடலான ‘லுசர்’ பாடல் வெளியாகியுள்ளது. ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த்திவ் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் நடிப்பில் உருவாகும் இத்திரைப்படம் செப்டம்பர் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved