Also Watch
Read this
By: Manigandan Raja

நாளை முதல் செப்டம்பர் 1 வரை பயணம்
பிரதமர் நரேந்திர மோடி, வரும் நாளை முதல் செப்டம்பர் 1 வரை உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்கிறார். உஸ்பெகிஸ்தானில் முதலீடு, கல்வி, பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் டிஜிட்டல் துறைகளில் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
தொடர்ந்து, கிர்கிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 26-வது உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார்.
கிர்கிஸ்தானில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு
கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் அடுத்த மாதம் 1ம் தேதி நடைபெறவிருக்கும் 26 ஆவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில், ரஷ்ய அதிபர் புதினை, பிரதமர் மோடி சந்திக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தச் சந்திப்பின்போது இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என வெளியுறவு செயலாளர் சிபி ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா விருப்பம்
சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்தி, இந்தியாவை உலகளாவிய விளையாட்டு மையமாக உருவாக்க மத்திய அரசு உறுதியாக இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அகமதாபாத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், 2036 ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூறினார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved