news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews
tv

Also Watch

முதல்வரை இயக்கும் கோட்டையின் முக்கிய அதிகாரி

News Tamil Kazhugu

16

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தவெகவோட வாக்குறுதியா இருந்தாலும், பரந்தூர் மாதிரியான திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுறது கோட்டையில் இருக்கற ஒரு முக்கிய அதிகாரி தானாம். முதல்வருக்கு ரொம்பவும் நெருக்கமா இருக்கற இவருக்கு எதிரா தவெக கூட்டணி கட்சிகளே இப்போ போர்கொடி தூக்கத் துவங்கியிருக்காம்.

தலைமைச் செயலகத்துல இருக்கற ஒரு முக்கிய அதிகாரிதான் முதல்வருக்கான முழு ஆலோசனையையும் கொடுத்துக்கிட்டிருக்காராம். இவர் பேச்சுக்கு முதல்வர் விஜய் தரப்புல இருந்து மறுபேச்சு இல்லைங்கற அளவுக்கு அந்த அதிகாரியோட கொடி, கோட்டையில பறக்குதாம்.

பரந்தூர் விமான நிலைய திட்டத்த அரசு கைவிட்டதுக்கு எதிர்கட்சிகள் கடுமையாம எதிர்த்தும், அந்த நிலைப்பாட்டுல முதல்வர் கொள்கை ரீதியான உறுதியா இருந்தாலும், பரந்தூர் மாதிரியான திமுக முன்னெடுத்த பல திட்டங்களை நிராகரிக்கணும்னு அந்த அதிகாரி முதல்வருக்கு ஆலோசனை சொல்லிக்கிட்டிருக்கறதா கோட்டையில நடுநிலையில இருக்கற அதிகாரிகள் பேசத் தொடங்கியிருக்காங்க.

குறிப்பா, காலை உணவுத்திட்டத்துக்கு காமராஜர் பெயர், விடியல் பயணத்தோட பெயர் மாற்றம்னு பல விவகாரங்களுக்கு அடியெடுத்துக் கொடுத்தது இந்த அதிகாரிதானாம். இவரை மாத்துறதுக்கு டெல்லியில திமுக தரப்பு காய் நகர்த்தத் துவங்கியிருக்கறதா அறிவாலய வட்டாரங்கள்ல ஒரு பேச்சிருக்கு.

Related Link
புதுக் கட்சி - தனுஷ் டீமின் டெல்லி டார்கெட்

புதுக் கட்சி - தனுஷ் டீமின் டெல்லி டார்கெட்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

FQL நிறுவனம் மோசடி, பணம் பறிகொடுத்த மக்கள் ஆவேசம்

23
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved