news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

பெரும் சீற்றத்தை தாக்குப்பிடித்து நின்ற பச்சை நிற வீடு

பத்திரமாக உயிர் தப்பினர்.

9

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
திடீர் வெள்ளம்

சீனாவிலும் 5 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்

நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 579 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஆயிரத்து 924 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டை நாடான சீனாவிலும் 5 பேர் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 584 ஆக உயர்ந்துள்ளது. இரு நாடுகளிலும் சேர்த்து சுமார் 2,500 பேர் மாயமாகியுள்ளனர். இதுவரை 3,742 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.மீட்புப் பணியில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

வீட்டில் இருந்த 3 குடும்ப உறுப்பினர்களும் உயிர் தப்பினர்

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளத்தில், ஒரு பச்சை நிற வீடு வெள்ள நீரின் பெரும் சீற்றத்தையும் தாக்குப்பிடித்து நின்ற காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீட்டில் இருந்த 3 குடும்ப உறுப்பினர்களும் பத்திரமாக உயிர் தப்பினர்.

சுற்றியிருந்த கட்டிடங்கள் மற்றும் பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், இந்த வீட்டின் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

குடியேறிகளின் கடற்கரை முகாமை அடித்து சேதம்

ஸ்பெயின் கட்டுப்பாட்டுப் பகுதியான சியூட்டாவில், குடியேறிகளின் கடற்கரை முகாமை உள்ளூர் மக்கள் சேதப்படுத்தி, கூடாரங்களை அகற்றி சில பொருட்களுக்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மொராக்கோவில் இருந்து சுமார் 72 ஆயிரம் பேர் சியூட்டாவுக்குள் நுழைந்த நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் மீண்டும் மொராக்கோவுக்கு திரும்பியுள்ளனர்.

தற்போது ஆயிரக்கணக்கானோர் அங்கு தங்கியிருப்பதால், உள்ளூர் மக்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.


Related Link
கைலாய யாத்திரை சென்று சிக்கிய 150 பேர் மீட்பு

கைலாய யாத்திரை சென்று சிக்கிய 150 பேர் மீட்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாதுகாக்கப்பட்ட கிளி இனத்தின் முட்டைகள்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved