news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

முடிவை மாற்றிக் கொண்ட நேபாளம்

மீட்புக் குழுவினர் விரைவில் செல்லக்கூடும்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நேபாளம்

காணாமல் போனவர்களை தேடும் பணிக்கு அனுமதிக்க நாடுகள் கோரிக்கை

பெருவெள்ள மீட்பு பணிகளுக்கு வெளிநாடுகளின் உதவியை நாட வேண்டாம் என்ற முடிவை நேபாள அரசு மாற்றிக் கொண்டுள்ளது. பேரிடர் மீட்புபணிக்கு அனுமதிக்க வேண்டும் என பல நாடுகள் கோரிக்கை விடுத்த நிலையில், குறிப்பிட்ட இடங்களில், வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் நிபுணர்களை அனுமதிப்பதாக நேபாள அரசு அறிவித்துள்ளது.

5 நாட்களுக்கு பிறகு சிறுவன் தாயுடன் இணைந்ததால் மகிழ்ச்சி

நேபாள பெருவெள்ளத்தின் போது காட்டுக்குள் ஓடிச் சென்று மரத்தில் ஏறி உயிர் தப்பிய ஜோயல் காலே ((Zoyal Ghale)) எனும் 8 வயது சிறுவன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 5 நாட்களுக்கு பிறகு தனது தாயுடன் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது இரு மகன்களையும் தேடி அலைந்து சலித்து போன சிறுவனின் தாய், இருவருமே உயிரிழந்திருப்பார்கள் என எண்ணத் தொடங்கிய நேரத்தில் முதலில் தனது இளைய மகனையும், பின்னர் தனது மூத்த மகன் ஜோயலையும் கண்டுபிடித்ததால் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

திரிசூலியில் பெய்யும் மழையால் மீட்புப் பணிகள் நிறுத்தம்

நேபாளத்தின் திரிசூலியில் பெய்து வரும் பலத்த மழையால் மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

மோசமான வானிலையால் மீட்பு பணிக்கு ஹெலிகாப்டர் ஈடுபடுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

Related Link
பாதுகாக்கப்பட்ட கிளி இனத்தின் முட்டைகள்

பாதுகாக்கப்பட்ட கிளி இனத்தின் முட்டைகள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

2012 ஹாலிவுட் படத்தின் காட்சிகளை நினைவுபடுத்துகிறது

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved