Also Watch
Read this

சென்னையில், இன்று செப்டம்பர் 2ஆம் தேதி, 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,800 குறைந்து, ரூ.1,11,600க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் ரூ.225 குறைந்து ரூ.13,950க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 29
சவரனுக்கு 2,360 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 16,040 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 295 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 14,505 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 60,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 30
ஞாயிற்றுக்கிமை என்பதால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.14,505-க்கும், ஒரு சவரன் ரூ.1,16,040-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் மாற்றமின்றி ரூ.260-க்கு விற்பனையானது.

ஆகஸ்ட் 31
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,080 குறைந்து, ரூ.1,14,960க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் ரூ.135 குறைந்து ரூ.14,370க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,60,000க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 01
ஒரு கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து 14 ஆயிரத்து 385 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 80 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. வெள்ளியின் விலை 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது. பிற்பகலில் ஒரு சவரனுக்கு ரூ.1,680 குறைந்து ரூ.1,13,400க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.210 குறைந்து ரூ.14,175க்கு விற்பனை ஆனது.

செப்டம்பர் 02
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,800 குறைந்து, ரூ.1,11,600க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் ரூ.225 குறைந்து ரூ.13,950க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
ஆகஸ்ட் 29 - ரூ.1,16,040
ஆகஸ்ட் 30 - ரூ.1,16,040
ஆகஸ்ட் 31 - ரூ.1,14,960
செப்டம்பர் 01 - ரூ.1,13,400
செப்டம்பர் 02 - ரூ.1,11,600 இன்று

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved