news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews
tv

Also Watch

அமெரிக்க ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் வீனஸ் வில்லியம்ஸ் தோல்வி

தொடரில் இருந்து வெளியேறினார்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
வீனஸ் வில்லியம்ஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி தொடக்கம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டி போட்டியில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், சக நாட்டு வீராங்கனையான சோபியா கெனின் உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய சோபியா கெனின் 6-2, 7-6 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடர்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த தொடருக்கு கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரும், துணை கேப்டனாக திலக் வர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அணியில், ஜஸ்பிரீத் பும்ரா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டிருந்தாலும், தங்களது உடற்தகுதி சான்றிதழை பெறுவதை பொறுத்தே விளையாடுவார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. போட்டிகள் செப்டம்பர் 13 முதல் 17 வரை டெல்லியில் நடைபெற உள்ளன.

பெலாரஸ் சபலென்கா, போலந்து இகா ஸ்வியாடெக் வெற்றி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் பெலாரசின் அரினா சபலென்கா, போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

நியூயார்க்கில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில், கொலம்பியாவின் கேமிலா ஒசோரியோவை எதிர்கொண்ட சபலென்கா 6-க்கு 2, 6-க்கு 4 என்ற செட் கணக்கில் வென்றார். மற்றொரு முதல் சுற்று போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-க்கு 2, 6-க்கு 3 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனை வாங் ஜியுவை வீழ்த்தினார்.

Related Link
டாப் 10-ல் இடம்பிடித்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா

டாப் 10-ல் இடம்பிடித்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பெருவெள்ளத்தில் சுரங்கத்திற்குள் சிக்கிய தொழிலாளர்கள்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved