news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

தமிழகத்தில் மோட்டார் விளையாட்டு நகரம் - முதலமைச்சர் விஜய்

விதி 110ன் கீழ் அறிவிப்பு

20

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையில் சர்வதேச தரத்தில் விளையாட்டு நகரம் அமைக்கப்படுமென முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். அனைத்து போட்டிகளுக்குமான ஒருங்கிணைந்த விளையாட்டு மையமாக கட்டப்படும் என்றும் கூறி உள்ளார்.
தமிழகத்தில் சர்வதேச தரத்தில் மோட்டார் விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்றும், சர்வதேச போட்டிகளை நடத்தும் வகையில், நவீன உள்கட்டமைப்புகளுடன் அமைக்கப்படுமென்றும் முதல்வர் விஜய் அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில்...
தமிழக சட்டப்பேரவையில், இன்று செப்டம்பர் 3ஆம் தேதி, விதி எண் 110 கீழ், முதல்வர் விஜய் பேசியதாவது;
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும்.

உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கம், அதிநவீன விளையாட்டு உபகரணம், உயர்தர செயல்திறன் பயிற்சி மையம், அறிவியல் மற்றும் விளையாட்டு மருத்துவ மையம், விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான தங்குமிட வசதி உள்ளிட்ட நவீன உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்படும்.

மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்
தமிழ்நாட்டில் ஒரு புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் உருவாக்கப்படும். தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டி மற்றும் பிற சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் அதிக எண்ணிக்கையிலான பதக்கம் வெல்லவும், ஒலிம்பிக் பதக்கம் வெல்லக்கூடிய திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கும் உலகத்தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த விளையாட்டு மையமாகத் திகழும். இந்த நகரத்தில் சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் பந்தயத் தடம், அதற்கான நவீன உட்கட்டமைப்பு வசதி மற்றும் பயிற்சி வசதி ஏற்படுத்தப்படும்.

சர்வதேச தரத்திலான...
ஃபார்முலா 1, ஃபார்முலா 2, ஃபார்முலா 3, ஃபார்முலா 4 போன்ற சர்வதேச தரத்திலான போட்டி நடத்துவதற்கான கட்டமைப்பு உருவாக்கப்படும்.

இளைஞர்களின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் திறமைகளைக் கண்டறிந்து, பயிற்சி மற்றும் போட்டி வாய்ப்பு வழங்கி, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான வீரர்கள் உருவாக்கபடுவார்கள். உலகத்தரம் வாய்ந்த மோட்டார் வாகன கார் பந்தய அரங்குகளை அமைப்பதன்மூலம், சுற்றுலா, சிறப்பு வாகன உற்பத்தித் தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மேம்பட வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

Related Link
தமிழுக்காக தனி தீர்மானம், உயர்நீதிமன்றத்தில் தமிழுக்கு முதலிடம்

தமிழுக்காக தனி தீர்மானம், உயர்நீதிமன்றத்தில் தமிழுக்கு முதலிடம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

உதயநிதி பேச்சு, சட்டசபையில் கூச்சல், குழப்பம்

44
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved