Also Watch
Read this
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டுமென முதலமைச்சர் விஜய் வலியுறுத்தி உள்ளார். தமிழுக்கு அங்கீகாரம் வழங்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வந்தார்.

தமிழக சட்டப்பேரவையில்...
இதுதொடர்பாக, தனித்தீர்மானம் கொண்டு வந்து, முதல்வர் விஜய் பேசியதாவது;
தமிழ் என்பது மொழி மட்டுமல்ல, உயிரோடும் உணர்வோடும் கலந்தது என்றே கருதுகிறோம்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு, தீர்ப்பாணை, உத்தரவுகள் அனைத்தும் தமிழில் வழங்கப்பட வேண்டும். வழக்கு தொடர்பான வாதங்கள் தமிழில் இருந்தால் மக்களுக்கு எளிதாக புரியும். மனுக்கள், வாதங்களுக்கு உரிய நடைமுறை வேண்டும். எனவே, தீர்ப்புகளை, உத்தரவுகளை தமிழில் வழங்கும் கட்டமைப்பு தேவை.

காலத்தின் கட்டாயம்
நீதிமன்ற வழக்கறிஞர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் தமிழில் மொழி பெயர்க்க சட்டத் தமிழ் பயிற்சி தேவை. மாவட்ட நீதிமன்றங்களில் தமிழ்நாடு வழக்காடு மொழியாக உள்ளது. அதனை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விரிவுபடுத்த வேண்டும்.

எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக கொண்டு வருவது காலத்தின் கட்டாயம். சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆங்கிலத்திற்கு இணையான வாய்ப்பைத் தமிழ் மொழிக்கு வழங்க வேண்டும்.

இந்த கோரிக்கை எந்த மொழிக்கும் எதிரானது அல்ல. மத்திய அரசும் குடியரசுத்தலைவரும் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved