Also Watch
Read this
காவல்துறை மானிய கோரிக்கை மீதான உதயநிதியின் பேச்சிற்கு த.வெ.கவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உதயநிதி குற்றச்சாட்டிற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறிய பதிலுக்கு திமுகவினர் தெரிவித்த எதிர்ப்பால் அமளி நிலவியது.

எதிர்க்கட்சித்தலைவர் பேச்சு
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது;
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு பற்றிய கேள்விகளுக்கு பழிபோடுதல், திசை திருப்பாமல் பதில் அளிப்பார் என நம்புகிறேன். திமுக ஆட்சியில் குற்றங்கள் குறைந்ததாக தவெக அரசின் கொள்கை விளக்க குறிப்பே கூறுகிறது. தவெக ஆட்சியில் பெயர் மாற்றம், திட்டங்களை ரத்துசெய்தல் மட்டுமே வருகிறது.

பெயர் மாற்றம் ஏன்?
தவெக அரசு பெறுப்பேற்றது முதல், புதிய திட்டங்களை விட ரத்து செய்த திட்டங்கள் அதிகம். திராவிட மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்ததை ஒப்புகொண்டமைக்கு நன்றி. திமுக ஆட்சியில் டாப்கியரில் சென்ற தமிழ்நாடு தவெக ஆட்சியில் ரிவர்ஸ் கியரில் செல்கிறது. தவெக அறிவித்த வாக்குறுதிகளை முழுமையாக செயல்படுத்தவில்லை.

பாதியாக செயல்படுத்துவதாக அறிவிப்பு மட்டுமே வெளியிட்டுள்ளீர்கள். தவெக அரசின் மொத்த திட்டங்களுக்கும் சேர்த்து தாய்மாமன் காது குத்தும் திட்டம் என பெயர் வைக்கலாம். திட்டங்கள் மக்களை சென்றடைவதை விட ரீல்ஸ் மட்டும் சென்றடைந்தால் போதும் என நினைக்கிறார்கள்.

தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கையில்லை
காவல் ஆணையத்தின் பரிந்துரைகளை படிப்படியாக செயல்படுத்த வேண்டும். திமுக அரசு செய்ததுபோல், நீண்டநாள் சிறையில் இருக்கும் இஸ்லாமிய கைதிகளுக்கு நீண்ட விடுப்பு வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் கொ* நடக்காத நாட்களே இல்லை என்ற நிலை உள்ளது.

116 நாள் தவெக ஆட்சி தமிழ்நாட்டு பெண்களுக்கு மிகப்பெரிய ட்ராஜிடி. தவெக ஆட்சியில் 10 ஆணவக் கொ*கள் நடைபெற்றுள்ளன. கறிக்கடைகளை விட மோசமாக தமிழ்நாட்டில் வெட்டு குத்து நடக்கிறது. பெண் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தும் தவெக எம்எல்ஏ மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
இவ்வாறு எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved