news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

பிறக்கப்போகும் குழந்தைக்கு சமந்தா ரசிகர் வைத்த பெயர்

சமந்தாவின் கூலான பதில்

43

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திரை உலகிலும் சமூக வலைதளங்களிலும் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கும் நடிகை சமந்தா, தற்போது தனது கர்ப்ப காலத்தைச் சந்தோஷமாக செலவிட்டு வருகிறார்.

இந்த நிலையில், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, சமந்தா அளித்த நகைச்சுவையான பதில் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமூகவலைதளத்தில்...
நடிகை சமந்தா பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவின் கமெண்ட் பகுதியில், i.m.anuk.377 என்ற கணக்கில் இருந்து ரசிகர் ஒருவர் மிகவும் அன்புடன் சமந்தாவின் குழந்தைக்கு பெயர் வைப்பது தொடர்பாக ஒரு யோசனையை முன்வைத்திருந்தார்.

அதில், உங்களுக்குப் பெண் குழந்தை பிறந்தால் சமைரா என்றும், ஆண் குழந்தை பிறந்தால் சாம்ராஜ் என்றும் பெயர் வைத்தால் எப்படி இருக்கும்? இது,சாம் மற்றும் ராஜ் ஆகிய இருவரின் பெயர்களின் கச்சிதமான கலவை என்று குறிப்பிட்டிருந்தார்.

சமந்தா கொடுத்த பதில்
இதைக் கண்ட நடிகை சமந்தா, அந்த ரசிகரின் கமெண்டிற்கு உடனே பதில் அளித்துள்ளார். அதில், ’SAMRAJ, அது கொஞ்சம் ஓவராக நம்மை நாமே சுயதம்பட்டம் அடிப்பது மாதிரி இல்லை?’ என சிரிப்பு எமோஜியுடன் ஜாலியாகக் கேள்வி எழுப்பியுள்ளார். சமந்தாவின் இந்த கலகலப்பான பதில் தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ரசிகரின் அன்பான பெயர் பரிந்துரையையும், அதற்குச் சமந்தா கொடுத்த நகைச்சுவையான பதிலும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வாரிக் குவியும் லைக்ஸ்
திரை வாழ்க்கை மட்டுமின்றி, தனது சொந்த வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் ரசிகர்களுடன் மிகவும் இயல்பாகவும் வெளிப்படையாகவும் பகிர்ந்து கொள்ளும் சமந்தாவின் இந்த க்யூட்டான ரீ-ஆக்சன் இணையத்தில் தற்போது லைக்சுகளை வாரிக் குவித்து வருகிறது.

Related Link
நடிகை சமந்தாவின் கர்ப்பகால உடற்பயிற்சி வீடியோக்கள்

நடிகை சமந்தாவின் கர்ப்பகால உடற்பயிற்சி வீடியோக்கள்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயத்தில் காங்கிரஸ், மருந்து போடுமா தவெக?

25
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved