news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

100 நாள் ஆட்சியில் பல கோடி சுருட்டல்? முதல்வர் டேபிளுக்கு போன ஊழல் ரிப்போர்ட்

நியூஸ் தமிழ் கழுகு...

33

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அமைச்சர்களோட ஒட்டுமொத்த உதவியாளர்களும் அதி தீவிர கண்காணிப்புல இருக்காங்களாம், நூறு நாட்கள்ல அமைச்சர்களுக்கு தெரிஞ்சும் தெரியாமலும் இவங்க அள்ளுனதே பல கோடிகளாம். ஊழல் லிஸ்ட் இப்போ சி.எம். டேபிளுக்கு போயிருக்காம்.

அரசாங்கத்தோட வேலைகள்ல எந்த இடத்திலும் ஊழல் நடக்கக் கூடாதுன்னு முதல்வர் அலுவலகம் வெச்ச முதல் செக்கே அமைச்சர்களுக்குத் தானாம். குறிப்பா, அமைச்சர்களோட அஃபிசியல் பி.ஏ, பொலிட்டிகல் பி.ஏ.ன்னு எல்லா உதவியாளர்களும் தீவிர கண்காணிப்புல வைக்கப்பட்டாங்களாம்.

நூறு நாள் ஆட்சி முடிவுல அமைச்சர்களோட பி.ஏ.க்கள் பற்றிய விலாவாரியான ரிப்போர்ட் முதல்வர் டேபிள்ல இருக்காம். இதுல பெரும்பாலானவங்க அமைச்சர்களோட சேர்ந்தும், சேராமலும் பல கோடிகளுக்கு அதிபதி ஆகியிருக்காங்களாம். இது பத்துன தீவிரமான ஒரு விசாரணை கோட்டையில போயிட்டிருக்காம். அமைச்சரவை பட்டியல் மாற்றத்துக்கு முன்னாடியே பி.ஏ.க்களோட பட்டியல்ல பெரிய மாற்றம் இருக்கும்னு தலைமைச் செயலகத்துல சீரியஸ் பேச்சு போயிட்டிருக்கு.

தவெகவில் திடீர் உட்கட்சி பூகம்பம், போனில் வெளுத்து வாங்கிய ஆனந்த்
எம்.பி. சீட்டுக்காக தவெகவுக்குள்ள புகுந்திருக்கற ஒரு புது க்ரூப், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை பிடிச்சு ரசிகர் மன்றங்கள்ல இருந்து விஜய் கூட இருந்த மூத்த கட்சி நிர்வாகிகளை ஓரம்கட்டுற வேலைய பார்க்கத் துவங்கியிருக்காம்.

வரப்போற நாடாளுமன்ற தேர்தல்ல எப்படியாச்சும் தவெகவுல சீட் வாங்கிடணும்னு, சில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை பிடிச்சு கட்சிக்குள்ள பதவிகள வாங்கிட்டிருக்காங்களாம், ஒருபுது குரூப். கூடவே ஏற்கெனவே ரசிகர் மன்றத்துல இருந்து விஜய் கூடவே பயணிச்சவங்களை ஓரம்கட்டுற வேலைகளையும் துவங்கிட்டாங்களாம். குறிப்பா, பெரியகுளம் தவெக எம்.எல்.ஏ.வா இருக்கற சபரி ஐங்கரனை தேனி வடக்கு மாவட்டத்தப் பிரிச்சு வடகிழக்கு மாவட்டத்துக்கு மாவட்ட செயலாளரா அறிவிச்சது கட்சித் தலைமை. சபரி ஐங்கரன் மா.செ.வான பிறகு அவரைச் சுற்றி ஒரு புது கூட்டம் உருவாகத் தொடங்கியிருக்காம்.

முக்கியமா தேர்தல்ல இவருக்கு நிதியுதவி செஞ்சதா சொல்லப்படுற பெரிய குளத்தைச் சேர்ந்த ஒரு தியேட்டர் குடும்பத்தோட வாரிசான ஷேக் அலிங்கறவருக்கு மாவட்ட இணை செயலாளர் பதவிய கொடுத்திருக்காரு சபரி ஐங்கரன். ஏற்கெனவே பல காலமா விஜய் ரசிகர் மன்றத்துல இருக்கற நிர்வாகிகளை ஓரம்கட்டிட்டு ஷேக் அலியோட உறவினர்கள், வசதி படைச்சவங்கன்னு கட்சிப் பொறுப்புகளுக்கு நியமனம் செஞ்சுக்கிட்டிருக்காராம் பெரியகுளம் எம்.எல்.ஏ.

தேனியோட அடுத்த எம்.பி. ஷேக் அலிதான்னு இப்பவே சொல்ல ஆரம்பிச்சு அவரை எம்.பி.ன்னே கூப்பிடத் தொடங்கிட்டாங்களாம். இதையெல்லாம் பார்த்து நொந்து போன கட்சிக்காரங்க நேரா புஸ்ஸி ஆனந்த பார்த்து கதறி அழுதிருக்காங்க. அந்த செகண்ட்லயே சபரிய போன்ல பிடிச்ச புஸ்ஸி, கட்சிய விக்கத் துவங்கிட்டீங்களா? தலைவரோட மனசு தெரியாம விளையாடாதீங்க, பழைய ஆளுங்க மேல கை வைச்சா நான் பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன்னு டோஸ் விட்டாராம்.

Related Link
அரசியலில் அடியெடுத்து வைக்கும் சிம்பு?

அரசியலில் அடியெடுத்து வைக்கும் சிம்பு?



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நேபாள பெரு வெள்ளத்தில் தப்பிய பச்சை நிற வீடு

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved