news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கப் போகும் புதிய தொழில்நுட்பம்

Software in a Syringe

28

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

புற்றுநோய்-ன்னாலே இன்னைக்கும் நம்ம பல பேருக்கு ஒரு நடுக்கம் இருக்கத்தான் செய்யுது. பல வருஷங்களா கீமோதெரபி, ரேடியேஷன் சிகிச்சைன்னு நோயாளிகளைப் படுத்தி எடுக்கிற சிகிச்சை முறைகளைத் தாண்டி, இப்போ மருத்துவ உலகத்துல ஒரு மாபெரும் புரட்சி வெடிச்சிருக்கு அது என்ன தெரியுமா? Software in a Syringe அதாவது ஊசியில ஒரு மென்பொருள். அந்த மெடிக்கல் மிரக்கிள் பத்தி முழுமையா தெரிஞ்சுக்கலாம் வாங்க...

அஞ்சி நடுங்கிய காலம்
புற்றுநோய்ங்கிற சொல்லைக் கேட்டாலே மனிதகுலம் அஞ்சிய காலம் இப்போ மாறிக்கிட்டு வருது. பல தசாப்தங்களா கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சைகள், புற்றுநோய் செல்களை அழிக்கிற அதே வேளையில், உடலின் ஆரோக்கியமான செல்களையும் சேர்த்துச் சேதப்படுத்தி கடுமையான பக்கவிளைவுகளை உண்டாக்கிக்கிட்டு இருக்கு. ஆனா, நவீன அறிவியல் மற்றும் கணினித் தொழில்நுட்பத்தின் உதவியால உருவான Software in a Syringe அதாவது ஊசியில மென்பொருள்ங்கிற இந்தப் புதிய கோட்பாடு, புற்று நோய் சிகிச்சையில ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கு.

Software in a Syringe ஏன் அழைக்கப்படுகிறது?
பாரம்பரிய தடுப்பூசிகள் மாதிரி இது ஆய்வகத்துல வைரஸைக் கட்டுப்படுத்தித் தயாரிக்கப்படுறது கிடையாது; இதுல mRNA தடுப்பூசியில உயிரியல் மருந்துக்குப் பதிலாக, நம்ம செல்லுக்குக் கொடுப்பதற்கான மரபுக் குறியீடு மட்டும்தான் இருக்கு. கம்ப்யூட்டர்ல ஒரு சாஃப்ட்வேர் எப்படி ஹார்டுவேரை இயக்குறதுக்கு அறிவுறுத்தல்களை அளிக்குதோ, அதேபோல இந்தத் தடுப்பூசி நம்ம உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்குப் புற்றுநோய் செல்களைக் கண்டறிந்து அழிப்பதற்கான டிஜிட்டல் குறியீடுகளை ஊசி மூலம் உடலுக்குள் செலுத்துகிறது.

பக்கவிளைவுகள் இல்லை
இதுமட்டுமில்லாம, இந்தத் தரவைக் கொண்டு சில வாரங்களிலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட நோயாளிக்கான பிரத்யேக mRNA துணுக்குகள் ஆய்வகத்தில் மென்பொருள் மூலமாக வடிவமைக்கப்படுது. இந்த mRNA உடலுக்குள் செலுத்தப்படும்போது, அது உடலின் T-செல்களுக்குப் பயிற்சி கொடுத்து உடலில் மறைந்திருக்கும் புற்றுநோய் செல்களை மட்டும் துல்லியமாகத் தேடிக் கண்டுபிடிக்கச் செய்கிறது. பாரம்பரிய கீமோதெரபியைப் போல அல்லாமல், இது ஆரோக்கியமான செல்களைத் தாக்குவதில்லை; இதனால முடி கொட்டுதல், கடுமையான சோர்வு போன்ற பக்கவிளைவுகள் இதுல ஏற்படுறதில்லை. மேலும், சிகிச்சை முடிந்த பிறகும் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு புற்றுநோய் பற்றிய
நினைவூட்டல் இருப்பதால், மீண்டும் நோய் தாக்குவதும் தடுக்கப்படுகிறது.

மருத்துவமும் தொழில்நுட்பமும்
தற்போதைய நிலையில, BioNTech, Moderna போன்ற முன்னணி மருத்துவ நிறுவனங்களும், OpenVax போன்ற திறந்த மூல பயோஇன்ஃபர்மேட்டிக்ஸ் அமைப்புகளும் இந்த புற்றுநோய் தடுப்பூசிகளை உருவாக்குறதுல தீவிரமா ஈடுபட்டுக்கிட்டு வர்றாங்க. குறிப்பா தோல் புற்றுநோய், கணையப் புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஆகியவற்றுக்கான மருத்துவப் பரிசோதனைகளில் இத்தொழில்நுட்பம் மிகச் சிறந்த முடிவுகளைக் கொடுத்து வருகிறது. இந்த முறையின் மூலம், கீமோதெரபி சிகிச்சையை முற்றிலும் தவிர்க்க முடியாவிட்டாலும், இந்த சிகிச்சையோட தேவையையும் பக்கவிளைவுகளையும் வெகுவாகக் குறைச்சிருக்கு. மருத்துவமும் தொழில்நுட்பமும் கை கோர்க்கும்போது புற்றுநோயை முற்றிலும் வெல்லும் காலம் தொலைவில் இல்லை என்பதை இந்த Software in a Syringe புரட்சி இப்போது நிரூபித்துக் காட்டி உள்ளது.

Related Link
இனி தினமும் ஊசி போட வேண்டாம், வந்துவிட்டது வாரத்திற்கு 1 இன்சுலின்

இனி தினமும் ஊசி போட வேண்டாம், வந்துவிட்டது வாரத்திற்கு 1 இன்சுலின்

             


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நேபாளத்திற்கு நிவாரண பொருட்களை அனுப்பிய அமெரிக்கா

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved