Also Watch
Read this
டெல்லியைச் சேர்ந்த ஒரு சர்வே ஏஜென்ஸி தமிழ்நாட்டுல ஜென்சி தலைமுறைகிட்ட ஒரு மெகா சர்வே நடத்தியிருக்காம், அதுல தவெக, திமுக பத்துன தங்களோட அதிருப்திய பதிவு செஞ்சிருக்காங்களாம் ஜென்சி கிட்கள்
தமிழ்நாட்டுல ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துறதுக்கு காரணமா கருதப்படுற ஜென்சிக்களோட ஆட்சி மாற்றத்துக்குப் பிறகான மனநிலை எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்க டெல்லியை சேர்ந்த சர்வே ஏஜென்ஸி ஒரு மெகா சர்வே நடத்தியிருக்காம்.

அதுல பிரதானமா கேட்கப்பட்ட ரெண்டு கேள்விகள், தவெக ஆட்சியப்பத்தியும், எதிர்கட்சியான திமுகவப் பத்தியும் தானாம். தவெக ஆட்சியப்பத்தி கருத்து சொன்ன ஜென்சிக்கள் முதல்வர் விஜய் நாங்க நினைச்ச மாதிரி ஊழல் பண்ணவங்க மேல கடுமையான நடவடிக்கைகளை எடுக்கல, பழகிப் போன ஒரு ஆட்சியாத்தான் தவெக ஆட்சியும் இருக்குன்னும், திமுக பத்துன கேள்விக்கு, அந்தக் கட்சி ஜென்சிக்களோட மனநிலைய புரிஞ்சுக்காம இருக்காங்க, தங்களப் பத்துன பெருமைகளையும், பழைய பல்லவிகளையுமே பாடிட்டிருக்காங்க.

ஜென்ஸி தலைமுறையோட ஆட்சியா பார்க்கப்படுற தவெக ஆட்சிக்கு கடிவாளம் போட ஜென்சிக்களோட எதிர்கட்சிதான் தமிழ்நாட்டுல இருக்கணும்னு சொல்லியிருக்காங்களாம்.

இந்த சர்வேக்களோட அடிப்படையிலதான் விஜய்க்கு போட்டியா அரசியலுக்கு வர ஒரு பக்கம் தனுஷும், இன்னொரு பக்கம் சிம்புவும் முயற்சி செஞ்சுக்கிட்டிருக்கறதா சொல்றாங்க.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved