Also Watch
Read this
By: Manigandan Raja

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ. 6-ம் தேதி ரிலீஸ்
இந்தியாவின் பெரும்பாலான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் "ராமாயணா" திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவம்பர் 6-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
"துரோகம் பழகு" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
"துரோகம் பழகு" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. நடிகர் எஸ்.வி. சேகர், FEFSI தலைவர் ஆர்.கே. செல்வமணி, நடிகர்கள் நட்டி நட்ராஜ், ராம்கி, நடிகைகள் பூனம் பாஜ்வா, இனியா, நந்திதா ஸ்வேதா மற்றும் அஷ்மிதா சிங் ஆகியோர் தங்களது சமூக வலைதள பக்கங்களில் இணைந்து வெளியிட்டனர்.

மகிழ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சீயோன் ராஜா இயக்கத்தில் படம் உருவாகியுள்ளது.
ஜிவி.பிரகாஷ் நடித்துள்ள "இம்மோர்டல்" திரைப்படம்
ஜிவி.பிரகாஷ் நடித்துள்ள "இம்மோர்டல்" திரைப்படத்தில் கயாடு லோஹர் நடித்துள்ள சிந்து கதாபாத்திரத்தின் படப்பிடிப்பு காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஹாரர் த்ரில்லர் கதையம்சத்தில் உருவாகியுள்ள இந்த படம் இன்று ரிலீஸாகிறது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved