Also Watch
Read this
By: Manigandan Raja

GTA 6 ரிலீஸ் ஆகும் அதே நாளில் விற்பனை
GTA 6 கேமிற்காக SONY மற்றும் ROCKSTAR GAMES நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய லிமிடெட் எடிஷன் PS5 DUAL SENSE கன்ட்ரோலர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய கன்ட்ரோலர்கள், GTA 6 ரிலீஸ் ஆகும் அதே நாளான நவம்பர்19 அன்று விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தோராயமாக 8 ஆயிரம் ரூபாய்க்கு இது விற்பனைக்கு வரலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இனி WhatsApp செயலியிலேயே பில் கட்டும் வசதி
இனி WhatsApp செயலியிலேயே மின்சாரம், சமையல் எரிவாயு, FASTag, இன்சூரன்ஸ், கடன் தவணைகளை நேரடியாகச் செலுத்தும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் Bharat Connect உதவியுடன் 30 பிரிவுகளின் கீழ் 22,722-க்கும் மேற்பட்ட சேவை நிறுவனங்களின் பில்களை WhatsApp-ல் UPI, Debit, Credit கார்டுகள் மூலம் செலுத்த முடியும்எ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved