news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home technologynews எனக்குத் தெரியாமலே வீடியோ எடுத்துட்டாங்க
tv

Also Watch

எனக்குத் தெரியாமலே வீடியோ எடுத்துட்டாங்க

டெல்லி

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மெட்டா

நீங்க ஒரு காபி ஷாப்புல உக்காந்திருக்கீங்க, உங்களுக்கு எதிரே இருக்குற ஒருத்தர் கண்ணாடி போட்டிருக்காரு. அது சாதாரண கண்ணாடி இல்ல, கேமரா இருக்குற ஸ்மார்ட் கண்ணாடின்னு உங்களுக்கே தெரியாது. அவர் உங்களை ரகசியமா பதிவு பண்ணி, அதை சமூக வலைதளத்துல போட்டு ஆயிரக்கணக்கான பேர் பார்த்தா எப்படி இருக்கும்? இப்படித்தான் டெல்லியில ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

டெல்லியின்  கான் மார்க்கெட்டில் உள்ள ஒரு காபி கடையில தனியாக இருந்த ஒரு நபரை, ஒரு சமூக வலைதளப் பிரபலமும் அவருடைய நண்பர்களும் தன்னுடைய அனுமதி இல்லாமல் பதிவு செஞ்சதா புகார் எழுந்திருக்கு. அந்த நபருக்கே தெரியாம, ரே-பான் மெட்டா ஸ்மார்ட் கண்ணாடியை பயன்படுத்தி அந்த சம்பவம் பதிவு செய்யப்பட்டதாக சொல்லப்படுது. அது மட்டுமில்லாம அந்த காணொளி சமூக வலைதளத்திலும் பதிவேற்றப்பட்டிருக்கு. ஜூலை 26-ம் தேதி பதிவேற்றப்பட்ட அந்த காணொளி ஆகஸ்ட் 6ஆம் தேதிக்குள்ள 4 லட்சத்து 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்திருக்கு.

இதை பார்த்த பிறகுதான் அந்த நபருக்கு தன்னை ரகசியமாக படமெடுத்த விஷயமே தெரியவந்திருக்கு. உடனே அவரு அந்த காணொளியை நீக்கணும், தன்கிட்ட மன்னிப்பு கேட்கணும்னும் தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக 2 கோடியே 5 லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுக்கணும்னு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிருக்காரு. தன்னை பதிவு செஞ்சவருக்கும், மெட்டா நிறுவனத்துக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கு.

இந்த கண்ணாடியை வடிவமைக்குற போது அதனால தனிமனித உரிமைகள் பாதிக்கப்படுதுங்கறதை கருத்துல எடுத்துக்காம மெட்டா நிறுவனம் செயல்பட்டிருக்குன்னு அந்த நோட்டீஸ்ல குற்றம்சாட்டப்பட்டிருக்கு. தொழில்நுட்பம் வளர வளர, நம்முடைய தனியுரிமையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அதை பயன்படுத்துற நபரைச் சார்ந்ததா? அந்த தொழில்நுட்பத்தை உருவாக்குற நிறுவனத்தை சார்ந்ததா? இல்லைன்னா, ரெண்டுபேருக்குமாங்கற கேள்வி எழுந்திருக்கு. இதை பத்தி நீங்க என்ன நெனைக்குறீங்கன்னு கமெண்ட்ஸ் ல சொல்லுங்க.

Related Link
UPI - புதிய உச்சம்!

UPI - புதிய உச்சம்!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பக்தர்கள் தரிசன டிக்கெட்டுகளை எளிதாகப் பெற நடவடிக்கை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved