Also Watch
Read this

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மண்டாடி’ திரைப்படம் வரும் 10ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

பிரம்மாண்டமாக...
சூரி நடித்துள்ள திரைப்படங்களிலேயே மிக அதிக பொருட்செலவில், சுமார் 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள பிரம்மாண்ட ஆக்சன் ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக, மண்டாடி தயாராகி உள்ளது. இந்த திரைப்படம் செப்டம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சில தினங்கள் தள்ளி வைக்கப்பட்டு செப்டம்பர் 10ஆம் தேதி ரிலீஸ் உறுதியாகி உள்ளது. இப்படத்திற்கு தணிக்கைக் குழுவால் U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

டோரதி படத்தின் OST ‘RAAJA BLISS'
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவாகியுள்ள ‘டோரதி’ படம் வெளியாவதற்கு முன்பே, இப்படத்தின் பின்னணி இசை வெளியாவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. திரைப்படம் தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பாகவே, அதன் பின்னணி இசையைத் தனி ஆல்பமாக வெளியிடுவது தமிழ் சினிமாவில் ஒரு புதுமையான மற்றும் அபூர்வமான முயற்சி. 'RAAJA BLISS' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அதிகாரப்பூர்வ OST ஆல்பம் நாளை செப்டம்பர் 5ஆம் தேதி அன்று டிஜிட்டல் தளங்களில் வெளியாகிறது. இந்த ஆல்பம் வெளியீட்டை முன்னிட்டு, 40 நிமிடங்கள் கொண்ட சிறப்பு லைவ் ஆர்கெஸ்ட்ரா கான்செர்ட் நாளை நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 18 டிராக் அடங்கிய பின்னணி இசை வாசித்துக் காட்டப்பட உள்ளது.

அவசியமே இல்லை...
நான் யாருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என நடிகை கயாடு லோஹர் தெரிவித்துள்ளார். ‘I'M GAME’ படத்தின் சில புரமோஷன்களில் நான் கலந்து கொள்ளவில்லை. அதனால், இந்தப் படத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார், அந்தப் படத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று சிலர் தங்களுக்குத் தோன்றியதை பேசுகிறார்கள் அதற்குப் பின்னால் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதனால் தான் புரமோஷன்களில் கலந்து கொள்ள முடியவில்லை. இதற்காக நான் யாருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று, நடிகை கயாடு லோஹர் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved