news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

அரசியல் காரணங்களுக்காக ரெய்டு என மு.க.ஸ்டாலின் சாடல்

புதிய அரசின் பூச்சாண்டி வேலை

28

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே கே.என்.நேரு வீட்டில் ரெய்டு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். புதிய அரசின் பூச்சாண்டிகளுக்கு அஞ்சாமல் சட்டத்தின் வழியில் அனைத்தையும் எதிர்கொண்டு வெல்வோம் என திட்டவட்டமாக கூறி உள்ளார்.

அரசியல் காரணம்
இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பதாவது;
உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. சட்டமன்றக் கூட்டத் தொடரும் நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு மீதான சோதனை நடவடிக்கையைத் த.வெ.க. அரசு மேற்கொண்டுள்ளது.

குதிரை பேரம்
ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து, சட்டமன்ற வளாகத்திலேயே அவர்களைத் தம் கட்சியில் சேர்த்ததையும் குதிரை பேரம் நடத்தியதையும், அது தொடர்பான புகார்களில் லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையைக் கூட பதியாததையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவர்.

எதிர்கொண்டு வெல்வோம்
இந்திய ஐனநாயகத்தின் இருண்ட பக்கமாய் இந்தப் போக்கு தொடரும் நிலையில், வழக்கம்போல் திசைதிருப்பும் நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது இந்த ரீல்ஸ் அரசு. கே.என்.நேருவும், திமுகவும் புதிய அரசின் இத்தகைய பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம். சட்டத்தின் வழியில் அனைத்தையும் எதிர்கொண்டு வெல்வோம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

Related Link
கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் ரெய்டு

கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் ரெய்டு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காவல்துறையை மறுகட்டமைக்கும் புதிய திட்டம்

29
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved