Also Watch
Read this

சென்னை கமலா தியேட்டருக்கு ‘Hi’ திரைப்படத்தை பார்க்க வந்த நடிகை நயன்தாரா ரசிகர்களை சந்தித்தார்.
நயன்தாரா உடன் கவின்...
நடிகை நையன்தாரா மற்றும் கவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'Hi' திரைப்படம், தியேட்டர்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிப்பதற்காகச் சென்னையில் பிரத்யேகமான 'நன்றி தெரிவிக்கும் விழா' நடைபெற்றது.

முதன்முறையாக வந்த நயன்தாரா
வழக்கமாக, தனது படங்களின் விளம்பர நிகழ்ச்சி, வெற்றி விழாக்களில் நடிகை நயன்தாரா கலந்து கொள்வதில்லை. ஆனால், 'Hi' படத்தின் மீதுள்ள லவ் மற்றும் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் காரணமாக, சென்னையில் உள்ள தியேட்டர்களுக்கு நேரில் சென்று ரசிகர்களைச் சந்தித்து, நயன்தாரா இன்ப அதிர்ச்சி கொடுத்தார். ரசிகர்களுடன் ஜாலியாக பேச வேண்டும் என்று நினைத்து வந்ததாகவும் ஆனால், படத்துக்கான வரவேற்பை பார்த்து உணர்ச்சி வசப்பட்டதாகவும் நயன்தாரா எமோஷ்னல் ஆகி உள்ளார்.

நெகிழ்ச்சி, மகிழ்ச்சி
சாய் அபயங்கரின் ‘விழி வீக்குற’ பாடல் வெளியாகி ஒராண்டு நிறைவு பெற்றதாக புகைப்படங்கள் வெளியிட்டு நடிகை சான்வி மேக்னா நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த மியூசிக் வீடியோவில் சாய் அபயங்கருடன் இணைந்து நடித்த பிரபல தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட நடிகை சான்வி மேக்னா (Saanve Megghana), தனது இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் இதுதொடர்பான நெகிழ்ச்சியான நினைவலைப் புகைப்படங்களைப் பகிர்ந்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். 'திங்க் மியூசிக் இந்தியா' நிறுவனத்தின் 'திங்க் இண்டி' தொடரின் கீழ் இப்பாடலின் வீடியோ கடந்த 2025 செப்டம்பர் 4ஆம் தேதி அன்று வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

7ஆம் தேதி வெளியாகிறது
மணிரத்னம் இயக்கத்தில் விஜய்சேதுபதி - சாய்பல்லவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வரும் 7-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஒரு அழகான காதல் கதையாக உருவாகி வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கொல்கத்தாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved