news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

கமிஷனர் மேஜைக்கு போன சீக்ரெட் வீடியோ

அடுத்த நொடியே அதிரடி நடவடிக்கை

22

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

போக்ஸோ வழக்குல சிறையில இருக்கற தொழிலதிபர் ஜெம் கிராணைட் வீரமணி, சமீபத்துல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை வித்திருக்காராம், இதோட பின்னணியை விசாரிக்கத் துவங்கியிருக்காம் வருமான வரித்துறை.

பிரபல தொழில் அதிபர் ஜெம் கிராணைட்ஸ் வீரமணி, சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வீடியோ ஆதாரங்கள் சென்னை போலீஸ் கமிஷனர் டேபிளுக்குப் போன அடுத்த நொடியே ஆக்சன் எடுக்க உத்தரவு போட்டுட்டாராம்,

ஆனா இதுதொடர்பான வழக்கு கடந்த ஆட்சியில போன அக்டோபர் மாதம் போடப்பட்டதுன்னு சொல்றாங்க. அந்த வழக்குல சிக்காம இருக்கறதுக்காக உயர் போலீஸ் அதிகாரிகள், பெண் இன்ஸ்பெக்டர்கள், பவர் செண்டர்ல இருந்த பலர்னு சுமார் ஐம்பது கோடிக்கும் மேல வீரமணி கொடுத்திருக்கறதா தகவல் வெளியாகியிருக்கு.

இந்த கொடுக்கல் வாங்கல்ல மீடியேட்டரா செயல்பட்டவரு ஒரு ரயில்வே தொழிற்சங்க விஐபியோட மகனாம். இன்னொரு பக்கம் வீரமணி தனக்கு சொந்தமான நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சொத்தை வித்துதான் எல்லோருக்கும் பட்டுவாடா செஞ்சிருக்கறதா செய்திகள் பரவிக்கிடக்கு.

இந்த நிலையிலதான், வீரமணியோட சொத்து விற்பனை தொடர்பா வருமான வரித்துறை அதிகாரிகள் முதல்கட்ட விசாரணையில இறங்கியிருக்காங்களாம்.

இந்த சோதனைக்குப் பின்னால சொத்து விற்பனையில வந்த தொகை வேற யார் யார் கைகளுக்கு போயிருக்குங்கற விசாரணையும் அடங்கியிருக்காம். இந்த விவகாரத்துல சில உயர்காக்கிகளும், இன்னும் பலரும் வீரமணிகிட்ட பலனடைஞ்ச விவரங்கள் சிக்கும்னு சொல்றாங்க.

Related Link
அழகிரியை குறிவைக்கும் அரசியல்?

அழகிரியை குறிவைக்கும் அரசியல்?

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடிகை நயன்தாரா சர்பிரைஸ் விசிட்

30
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved