news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news அழகிரியை குறிவைக்கும் அரசியல்?
tv

Also Watch

அழகிரியை குறிவைக்கும் அரசியல்?

கோர்ட்டில் ED வைத்த ட்விஸ்ட்

29

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அரசியலில் இருந்தே ஒதுங்கியிருக்கற மு.க.அழகிரியை மறுபடியும் அரசியல் சீண்டிப் பார்க்குதுன்னு அவரோட ஆதரவாளர்கள் கொந்தளிக்கறாங்க. காரணம், அவரோட மகன் துரைதயாநிதிக்கு எதிரா அமலாக்கத்துறை கோர்ட்டுல எடுத்த நடவடிக்கை தான்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குல குற்றம் சாட்டப்பட்டிருக்கற மு.க.அழகிரியோட மகன் துரை தயாநிதோட உடல்நிலை மனநிலை பத்துன மருத்துவ பரிசோதனை செஞ்சு ரிப்போர்ட் கொடுக்க, ஜிப்மர் மருத்துவமனைக்கு மதுரை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு போட்டிருக்கு. காரணம், நரம்பியல் குறைபாடு, பக்கவாதம் உள்ளிட்ட பிரச்னைகள்ல இருக்கற துரை தயாநிதியால விசாரணைக்கு நேர்ல வரமுடியாதுன்னு கோர்ட்டுல மனு தாக்கல் செஞ்சிருந்தாங்க,

இதை எதிர்த்துதான் அமலாக்கத்துறை கோர்ட்டுல வாதாடியிருக்கு. கிரிக்கெட் போட்டிய பார்க்கப் போறாரு, ஓட்டுப்போடவும் போயிருக்காருன்னு அமலாக்கத்துறை துரை தயாநிதி பத்துன ஆதாரங்களை கோர்ட்டுல காட்டுன பிறகுதான் நீதிமன்றம் அவரை பரிசோதனை செய்ய உத்தரவிட்டிருக்கு.

ஜெயலலிதா காலத்துல கீழவளவு காவல்நிலையத்துல போடப்பட்ட கிராணைட் முறைகேடு வழக்குல அரசு நிலத்துல சட்ட விரோதமா கிரானைட் குவாரி நடத்தி அரசுக்கு பெரிய வருவாய் இழப்பை ஏற்படுத்துனாருன்னு குற்றம் சாட்டப்பட்டிருந்துச்சு, இந்த வழக்குல உள்ள வந்த அமலாக்கத்துறை 256 கோடிக்கு சட்டவிரோத பணப்பரிவர்த்தனைத் தடைச் சட்டத்துல துரை தயாநிதி மேல வழக்குப்போட்டுச்சு. இந்த வழக்கு தான் இப்போ மு.க.அழகிரி குடும்பத்தை நெருக்கத் துவங்கியிருக்கு.

ஆனா, அழகிரி ஆதரவாளர்களோ, கிரிக்கெட் ஸ்டேடியத்துக்குப் போனதும், துரைதயாநிதி அடிக்கடி போற பல இடங்களுக்கு அவரை கூட்டிட்டுப் போறதும் துரைதயாநிதியோட சிகிச்சைக்கான ஒரு அங்கம்னும், ஏற்கெனவே போன இடங்களுக்கு அவரைக் கூட்டிட்டுப் போனா அவரோட நினைவுகள் திரும்ப வாய்ப்பிருக்குன்னு மருத்துவர்கள் சொன்னதால அவர கூட்டிட்டுப் போனோம்னு சொல்றாங்க. இந்த வழக்கால திரும்பவும் அழகிரிய அரசியலுக்குள்ள இழுக்கற வேலைகள யாரோ செய்ய ஆரம்பிச்சிருக்காங்கன்னு சந்தேகப்படுறாங்க.

Related Link
100 நாள் ஆட்சியில் பல கோடி சுருட்டல்? முதல்வர் டேபிளுக்கு போன ஊழல் ரிப்போர்ட்

100 நாள் ஆட்சியில் பல கோடி சுருட்டல்? முதல்வர் டேபிளுக்கு போன ஊழல் ரிப்போர்ட்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடிகை நயன்தாரா சர்பிரைஸ் விசிட்

29
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved