Also Watch
Read this
By: Manigandan Raja

நேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஒலி கருத்து
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் மாயமான 5 ஆயிரம் பேரை மீட்பதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்கள் சிட்வான் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டு வருவதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அவர் கூறினார். பனிப்பாறையின் பெரும் பகுதி இன்னும் அப்படியே இருப்பதால், அது எப்போது வேண்டுமானாலும் உடைந்து மீண்டும் பேரழிவை ஏற்படுத்தலாம் என எச்சரித்தார்.
பாகிஸ்தான் ராணுவ வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள்
பாகிஸ்தானின் ராணுவ வாகனங்கள் மீது பலுசிஸ்தான் விடுதலைப் படை நடத்திய தாக்குதல்களில் 25 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலுசிஸ்தான் மாகாணத்தில் இருவேறு இடங்களில் நடத்தப்பட்ட இத்தாக்குதல்களின் வீடியோவை பலுசிஸ்தான் விடுதலைப் படை வெளியிட்டுள்ளது.

தெற்கு நைஜீரியாவில் நச்சுவாயுவை சுவாசித்து 37 பேர் பலி
தெற்கு நைஜீரியாவில் எண்ணெய் குழாயில் இருந்து வெளியான நச்சு வாயுவைச் சுவாசித்ததில் சுமார் 37 பேர் உயிரிழந்தனர். ரிவர்ஸ் மாகாணத்தில் ஒக்ரிகா (Okrika) பகுதியில் நள்ளிரவு நேரத்தில் ஏராளமான இளைஞர்கள் படகுகள் மூலம் வந்து, எண்ணெய் குழாயை உடைத்து எரிபொருளை திருட முயன்றுள்ளனர்.

அப்போது அதிக அழுத்தத்துடன் வெளியேறிய நச்சுப்புகை அப்பகுதி முழுவதும் பரவியதில் பலர் மயங்கி ஆற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved