Also Watch
Read this
By: Manigandan Raja

கல்வி நிர்வாகத்தில் புதுமை புகுத்தியதற்காக விருது
டெல்லியில் உள்ள தேசியக் கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாக நிறுவனம் (NIEPA) சார்பில் "Awards for Innovations and Good Practices in Educational Administration 2023-24 - 2024-25" என்ற தலைப்பில் மாவட்ட, வட்டார அளவிலான கல்வி அலுவலர்களுக்கான தேசிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்வி நிர்வாகத்தில் புதுமையான ICT நடைமுறைகளை செயல்படுத்தியதற்காக ஜி. குணசேகரன் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியை மாநிலங்களவை உறுப்பினரும், பாஜக தேசிய பொதுச்செயலாளருமான வினோத் ஸ்ரீதர் தாவ்டே தொடங்கி வைத்தார். இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் முன்னாள் NIEPA இயக்குனரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான பேராசிரியர் ஜே.எஸ். ராஜ்புத் விருதுகளை வழங்கினார்.
ஜி. குணசேகரன் தலைமையில் செயல்படுத்தப்பட்ட திட்டத்தின் மூலம் கிராமப்புற அரசு பள்ளிகளில் மாணவர் வருகை, வகுப்பு செயல்பாடுகள், கற்றல் அமர்வுகள், பாட நெறி நிறைவு உள்ளிட்ட விவரங்கள் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டன.

Google Sheets, Monitoring Apps, ICT Dashboards, WhatsApp குழுக்கள், வீடியோ அழைப்புகள் போன்ற கருவிகள் மூலம் பள்ளிகள் கண்காணிக்கப்பட்டு, தரவுகளின் அடிப்படையில் உடனடி வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.
மேலும் டிஜிட்டல் வகுப்பறைகள் மூலம் ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த கற்றல் வாய்ப்புகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
இதற்காக ஜி.குணசேரனை தேர்வு செய்யப்பட்டு இன்று அவருக்கு டெல்லியில் விருது வழங்கப்பட்டது.
விருது குறித்து ஜி. குணசேகரன் கூறுகையில், டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் 'கல்வியில் புதுமை' என்ற தலைப்பில் தமிழகத்தைச் சேர்ந்த இருவருக்கு விருது வழங்கப்பட்டது. தொண்டு நிறுவன உதவியுடன் இந்த பணியை மேற்கொண்டேன். கிராமப்புற அரசு பள்ளி மாணவர்கள் பெங்களூருவில் நடந்த கல்வி போட்டிகளில் தங்கப்பதக்கம் உட்பட தேசிய அளவில் பல பதக்கங்களை வென்றுள்ளனர். இந்த விருது அதற்கான அங்கீகாரமாக கருதுவதாக தெரிவித்தார்.
இந்த விருது திருவண்ணாமலை மாவட்டத்திற்கும், தமிழக கல்வித் துறைக்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்ததுள்ளதாக தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved