Also Watch
Read this
By: Manigandan Raja

அனைத்து விமானிகளுக்கும் 100 % தன்னார்வ பரிசோதனை
ஃபூகெட் விமான சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியான நிலையில், ஏர் இந்தியாவின் அனைத்து விமானிகளுக்கும் தன்னார்வ அடிப்படையில் 100 சதவீத போதைப்பொருள் பரிசோதனை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
விமானத்தில் ஏற்பட்ட ஹைட்ராலிக் கோளாறு மற்றும் குழுவினரின் மருத்துவ பரிசோதனை தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
லடாக்கில் சிந்து நதியின் குறுக்கே புதிய பாறை தடுப்பணை
லடாக்கில் சிந்து நதியின் குறுக்கே மத்திய அரசு புதிய பாறை தடுப்பணையை கட்டி வருகிறது. சிந்து நீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள சூழலில், அந்த நீர் பாகிஸ்தானுக்குச் சென்றடைவதற்கு முன்பாகவே, எல்லைப் பகுதிகளில் பயன்படுத்துவதற்கும், விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் மத்திய அரசு இப்போது தீவிரமாக உள்கட்டமைப்பை உருவாக்கி வருகிறது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved