Also Watch
Read this
By: Manigandan Raja

ஒன்றரை மாதத்தில் ஆற்றை சுத்தம் செய்து சாதனை
மத்திய பிரதேசம் மாநிலத்தில் குப்பை கூளமாக காட்சியளித்த ஆற்றை தனி ஆளாக நின்று இளைஞர் சுத்தம் செய்த நிகழ்வு பலரையும் வியக்க வைத்துள்ளது. 19 வயதான bittu tabhi என்பவர், தினசரி மாலை 3 மணியிலிருந்து 6 மணி வரை சுத்தம் செய்வதற்காக நேரத்தை செலவிட்டு ஒன்றரை மாதத்தில் ஆற்றை சுத்தப்படுத்தினார்.
சென்னை ஐஐடியுடன் அசாம் கல்வித்துறை ஒப்பந்தம்
அசாமில் கல்வித்துறையில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த, மாநில அரசு 6 நிறுவனங்கள் மற்றும் ஐஐடி மெட்ராஸுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் ஏ.ஐ. தளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, ஆசிரியர்களின் பாடத்திட்டத் தயாரிப்பு மற்றும் கற்பித்தலுக்கு உதவ உள்ளன.

போலீசாரிடமிருந்து தப்பிக்க குளத்தில் பதுங்கிய குற்றவாளி
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில், போலீசாரிடம் இருந்து தப்பிக்க குளத்துக்குள் பதுங்கிய குற்றவாளியை போலீசார் தண்ணீரில் குதித்து பிடித்தனர்.
பத்ராவதியைச் சேர்ந்த 19 வயது திலீப் என்கிற கரியா மீது கொலை முயற்சி வழக்குகள் இரண்டு உட்பட 16 வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீதிமன்றம் மூன்று முறை பிடிவாரண்ட் பிறப்பித்தும் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved