news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews
tv

Also Watch

தேசிய நல்லாசிரியர் விருது குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருதை வழங்கினார்

தேசிய நல்லாசிரியர் விருது

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
திரௌபதி முர்மு

தேசிய ஆசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள 82 கல்வியாளர்கள்

ஆசிரியர் தினத்தையொட்டி 2026 ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதை 82 சிறந்த கல்வியாளர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். 48 பள்ளி ஆசிரியர்கள், 21 உயர்கல்வி ஆசிரியர்கள் மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் கீழ் உள்ள 13 பயிற்சியாளர்கள் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.

முன்னதாக , நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தின வாழ்த்துகளை குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

வான் பாதுகாப்பு அமைப்பின் விலை விவரங்களை அனுப்பிய ரஷ்யா

ரஷ்யாவிடம் இருந்து மேலும் 5 எஸ்-400 வான்பாதுகாப்பு அமைப்புகளை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான மூலப்பொருட்கள் மற்றும் செலவு குறித்த விவரங்களை அந்நாட்டு அரசு அனுப்பியுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது S-400 வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக செயல்பட்ட நிலையில், புதிதாக வாங்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஐந்து எஸ் - 400 வான்பாதுகாப்பு அமைப்புகள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் 5வது அமைப்பு வருகிற நவம்பர் மாதம் இந்தியாவிற்கு வந்து சேருமென தகவல் வெளியாகி உள்ளது.

தெலங்கானாவில் ஆட்சியை பிடிக்க பாஜக சதி- ரேவந்த் ரெட்டி

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை பயன்படுத்தி மேற்குவங்கத்தில் ஆட்சியை பிடித்தது போல், தெலங்கானாவிலும் ஆட்சியை பிடிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிரா, பீகார், மேற்குவங்கத்தில் எதிர்க்கட்சி வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து அகற்ற வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை பாஜக பயன்படுத்தி கொண்டதாகவும் அவர் சாடியுள்ளார்.

Related Link
கார்க் தீவு அருகே எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

கார்க் தீவு அருகே எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தூய ஆரோக்கிய அன்னை திருத்தல ஆண்டு பெருவிழா

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved