Also Watch
Read this
By: Manigandan Raja

காயம் காரணமாக பும்ரா இடம்பெறவில்லை
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் பும்ராவுக்கு பதிலாக பிரின்ஸ் யாதவை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடர் டெல்லியில் வரும் 13, 15 மற்றும் 17-ம் தேதிகளில் நடைபெறுகிறது.
ஷ்ரேயஸ் அய்யர் தலைமையிலான 11 பேர் கொண்ட அணியில் வேகப்பந்து வீரர் ஜஸ்பிரீத் பும்ரா இடம்பெற்றுள்ளார். எனினும், இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அவர் காயமடைந்த நிலையில், கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ குழுவிடம் இருந்து இன்னும் உடல் தகுதிக்கான அனுமதி கிடைக்கவில்லை.
யு.எஸ், ஓபன் டென்னிஸ் தொடரில் சபலென்கா அபாரம்
யு.எஸ், ஓபன் டென்னிஸ் தொடரில் முன்னணி வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, முன்னணி வீரரான ஸ்பெயினின் அல்காரஸ் உள்ளிட்டோர் 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில், உஸ்பெகிஸ்தானின் கமில்லா ரகிமோவாவை சபலென்கா 6-க்கு 3, 6-க்கு 4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். அதேபோல, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், சீனாவின் இபிங் வுவை 6-க்கு 3, 6-க்கு 4, 6-க்கு 1 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர்
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி அபாரமாக விளையாடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் மலேசியாவின் நூர் முகமது - டான் வீ கியாங் ஜோடியை எதிர்கொண்ட சாத்விக் - சிராக் ஜோடி முதல் செட்டை 21-க்கு 16 என வென்றது.

பதிலடியாக மலேசிய ஜோடி 2-வது செட்டை 21-க்கு 18 என கைப்பற்றியது. இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய சாத்விக் - சிராக் ஜோடி 21-க்கு 11 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved