Also Watch
Read this
By: Manigandan Raja

சிறிய பட்ஜெட் படம்: மிகப்பெரிய பொறுப்பு உள்ளது
சிறிய பட்ஜெட்டில் படம் எடுப்பவர்களுக்குத்தான் மிகப்பெரிய பொறுப்பு உள்ளதாகவும், அதை உணர்ந்து தற்போது பல படங்கள் வெளியாவதாகவும் நடிகர் பகவதி பெருமாள் தெரிவித்துள்ளார். ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா நடிப்பில் கடந்த 21-ம் தேதி வெளியான "மொதராத்திரி" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதையடுத்து, சென்னையில் நடைபெற்ற படத்தின் நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், சினிமாவில் 100 பேர் ஜெயித்தால் லட்சம் பேர் காணாமல் போவதாக தெரிவித்தார்.
"ஐ ஆம் கேம்" திரைப்படத்துக்கு ரசிகர்களின் ஆதரவு இல்லை
நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள "ஐ ஆம் கேம்" திரைப்படம் வெளியான 3 நாட்களில் 25 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நஹால் ஹிதாயத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் கடந்த 3-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

ஆனால், மலையாளத்தை தவிர பிற மொழிக்கான வடிவத்தை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் தமிழில் 4-ம் தேதி வெளியானது. துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனம் மிகப்பெரிய செலவில் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில், ரசிகர்களின் ஆதரவு குறைத்திருக்கிறது.
ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் படம்
ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் புதிய திரைப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. "கராத்தே பாபு, பென்ஸ், ப்ரோ கோட்" உள்ளிட்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் அவர், தனது நீண்டநாள் கனவை நனவாக்கும் வகையில் ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

இந்த நிறுவனத்தின் முதல் படைப்பாக AN ORDINARY MAN என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கிறார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved