news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews
tv

Also Watch

டெல்லியில் 5 மாடி கட்டடங்களுக்கு சீல் வைக்க உத்தரவு

டெல்லி

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Delhi building

சட்டவிரோத கட்டடங்களுக்கு சீல்: முதலமைச்சர் உத்தரவு

டெல்லி முழுவதும் சட்டவிரோதமாக கட்டப்பட்ட 5 மாடி கட்டடங்களுக்கு உடனடியாக சீல் வைக்க மாநில முதலமைச்சர் ரேகா குப்தா உத்தரவிட்டுள்ளார். மேலும், சத்ய நிகேதன் பகுதியிலுள்ள அனைத்து விடுதிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விதிமீறல்களுக்கு எதிராக சீல் வைப்பதுடன் கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் விடுதி கட்டடம் இடிந்ததில் 7 மாணவர்கள் பலி

டெல்லியில் விடுதி கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 19 வயது மாணவரின் கருவிழிகளை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்க முடிவு செய்துள்ளனர். மத்திய பிரதேசத்தை சேர்ந்த அர்பித், ரக்ஷா பந்தன் பண்டிகையை ஊரில் கொண்டாடிவிட்டு ஞாயிற்றுக்கிழமை காலையில்தான் திரும்பிய நிலையில், விடுதி கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார்.

இந்தியா - வங்கதேசம் இடையே நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள்

இந்தியா - வங்கதேசம் இடையே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில் சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து இரு நாட்டு ரயில்வே அதிகாரிகள் தரப்பில் இன்று முதல் 2 நாள்களுக்கு டாக்காவில் ஆலோசனை நடைபெறவுள்ளது.

வங்கதேசத்தில் 2024-ல் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ காரணமான வன்முறை எதிரொலியாக இரு நாடுகள் இடையேயான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.

Related Link
குழந்தை திருமணம் செய்தால் அரசு நலத்திட்ட உதவி இல்லை

குழந்தை திருமணம் செய்தால் அரசு நலத்திட்ட உதவி இல்லை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈஃபிள் கோபுர ஊழியர்களின் போராட்டத்தால் பணிகள் முடக்கம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved