Also Watch
Read this
By: Manigandan Raja

ஷோபினாவ் சத்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிச்சிருக்காரு.
வெறும் 2 கோடி ரூபாயிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவான ‘ஹனுமான் அன்ஷ்’ படம் ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பால 156.20 கோடி ரூபாய் வசூலை எட்டியிருக்குறதா தகவல்கள் வெளியாகி இருக்கு.
விஷால் சதுர்வேதி எழுதி இயக்கி கடந்த ஆகஸ்ட் 7-ந் தேதி வெளியான பாலிவுட் திரைப்படமான ‘ஹனுமான் அன்ஷ்’. நீம் கரோலி பாபா என பக்தர்களால் போற்றப்படும் ஆன்மிக குருவின் வாழ்க்கை, தத்துவம், ஆன்மிக போதனைகளை மையமா வெச்சு இப்படம் உருவாகியிருக்கு. ஷோபினாவ் சத்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிச்சிருக்காரு.
2 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் தொடக்கத்தில் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்ப பெறல.. முதல் வாரத்தில் ரூ.1.08 கோடியும், 2-வது வாரத்தில் ரூ.40 லட்சமும் மட்டுமே வசூலச்சிருந்தது. ஆனா 3-வது வாரத்துல படத்தின் வசூல் வேகமெடுக்கத் தொடங்குச்சு.
5-வது வாரத்தில் வெற்றிகரமாக ஓடிவரும் இந்த படம், வெளியான 32-வது நாட்கள்ல மொத்தம் ரூ.156.20 கோடியை வசூலிச்சிருக்கறதாவும், இதே வேகத்தில் வசூல் தொடர்ந்தால் 200 கோடி ரூபாய் வசூலை கடக்க வாய்ப்புள்ளதா சொல்லப்படுது.
சரியான நேரத்தில் வாய்ப்பு தேடி வந்தது - கெனிஷா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவி மோகன். இவரு தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'ரவி மோகன் ஸ்டுடியோஸ்'-ன் பேனரில் 'ஆன் ஆர்டினரி மேன்' என்ற படத்தை இயக்கி தயாரிச்சுட்டு வராரு. இந்த படத்தில் நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடிச்சுட்டு வர்றது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கு.
இத்திரைப்படத்த்துக்கு பிரபல பாடகியான கெனிஷா பிரான்சிஸ் இசையமைக்கப் போறதா தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிச்சுருக்கு. சரியான நேரத்தில் இந்த படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு என்னைத் தேடி வந்துருக்கு, முழுநீளத் திரைப்படத்திற்கு இசையமைக்குறதுங்குறது மிகப்பெரிய பொறுப்பு.

நான் கவனமாக இருந்து பல இசை வகைகளை ஆராய்ந்து படத்துக்கான மியூஸிக்கை உருவாக்கியிருக்கேன்னு கெனிஷா சொல்லியிருக்காங்க.
‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ வெற்றி – படக்குழுவினருடன் நிவின் பாலி!
பெத்லகேம் குடும்ப யூனிட் படம் மூலமா மாலிவுட்டோட வசூல் மன்னனா மாறியிருக்கற நிவின் பாலி அடுத்து தன்னோட 51வது படத்த்துல நடிச்சுட்டு வர்றாரு. இதோட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துக்கிட்டிருக்கு.

இந்தப்படத்துல நிவின் பாலியுடன் ருக்மிணி வசந்த் ஜோடியா நடிச்சுட்டு வராங்க. இந்த நிலையில, ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ வெற்றியை அந்த படக்குழுவினர் நிவின் பாலியோட புது படப்பிடிப்பு தளத்திலேயே உற்சாகமாகக் கொண்டாடியிருக்காங்க. படக்குழுவினருடன் நிவின் பாலி சேர்ந்து கொண்டாடுன தருணங்களோட வீடியோ தற்போது சமூக வலைதளங்ள வைரலாகிட்டு வருது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved