Also Watch
Read this
By: Manigandan Raja

அமெரிக்கா-ஈரான் மோதலால் கச்சா எண்ணெய் விலை உயர்வு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் தீவிரமடைந்துள்ளதால், உலகளவில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 8 ஆயிரத்து 800 ரூபாய் உயர்ந்துள்ளது. ஈரானின் 5 கச்சா எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா தாக்கி அழித்ததும், அதற்குப் பதிலடியாக அமெரிக்க கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதுமே இந்த திடீர் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது.
கீவ்வில் ரஷ்யத் தாக்குதலால் நொறுங்கிய வீடு திட்டமிட்டபடி திருமணத்தை நடத்திய ஜோடி
உக்ரைனின் தலைநகரான கீவ்வில், ரஷ்யத் தாக்குதலால் வீடுகளை இழந்த ஜோடி திட்டமிட்டபடி தங்களது திருமணத்தை நடத்தியுள்ளனர். திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு, அவர்களின் வீட்டிற்கு எதிரே இருந்த ஒரு சேமிப்பு கிடங்கு மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலின் அதிர்வால் வீடு முழுவதும் நொறுங்கியது.

இருப்பினும் இடிபாடிகளுக்குள் சிக்கியிருந்த தங்களது திருமண ஆடைகளை உடுத்தி, அவர்கள் கீவ்வில் உள்ள பதிவு அலுவலகத்திற்குச் சென்று முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved