Also Watch
Read this
By: Manigandan Raja

கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் வீட்டில் ரெய்டு
விசாரணை அமைப்புகளை பாஜக தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்துவதாக கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். பொதுப்பணித்துறை அமைச்சர் சதிஷ் ஜார்கிஹோலியை குறிவைத்து அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், இதுபோன்ற ரெய்டுகளால் காங்கிரஸ் தலைமையோ அதன் தொண்டர்களோ ஒருபோதும் கலங்கப்போவதில்லை என்று தெரிவித்தார்.
தமிழகத்திற்கு 6000 கன அடி காவிரி நீர் திறக்கும் உத்தரவுக்கு கர்நாடக அரசு எதிர்ப்பு
தமிழகத்திற்கு தினமும் 6ஆயிரம் கன அடி காவிரி நீர் திறக்கும் உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாக அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். அணைகளின் நீர்மட்டம் தற்போது மிகவும் கவலைக்குரிய நிலையில் உள்ளதாக அமைச்சர் சலுவராயசாமி கூறினார்.
எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் சஸ்பெண்ட்
தெலுங்கானாவில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில், எதிர்க்கட்சியான பாரத ராஷ்டிரிய சமிதியை சேர்ந்த 22 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்துள்ளார். சந்திரசேகரராவ் குறித்து ஆளும் காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக விவாதிக்க கோரி BRS எம்.எல்.ஏக்கள் போராட்டம் நடத்தினர்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved