Also Watch
Read this
By: Manigandan Raja

டெல்லி போராட்டம் தொடர்பாக பயனுள்ள பேச்சுவார்த்தை
டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது அதீத பலத்தை பயன்படுத்தாமல், பேச்சுவார்த்தை நடத்தியது பயனுள்ள அணுகுமுறை என ஐநா மனித உரிமை உயர் ஆணையர் வோல்கர் டர்க், இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அதேசமயம், பாகிஸ்தானில் போராட்டத்தை ஒடுக்க அதிகப்படியான படையை பயன்படுத்துவதும், சட்டவிரோதமாக கைது செய்யப்படுவதும் நடப்பதாகவும் கூறினார்.
தலைமை ஆசிரியரை சரமாரியாக தாக்கிய மாணவர்கள்
மேற்குவங்கத்தில் பள்ளி தலைமை ஆசிரியரை மாணவர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜல்பைகுரியில் உள்ள 150 ஆண்டுகால பழமையான பள்ளிக் கூடத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்பு மதிய உணவு வழங்கப்பட்டது. அப்போது, போதுமான சாப்பாடு மற்றும் சிக்கன் வழங்கவில்லை எனக் கூறி, தலைமை ஆசிரியரை கீழே தள்ளிவிட்டு கடுமையாக தாக்கியுள்ளனர்.
சௌதி அரேபியா மீது ஹோதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
சௌதி அரேபியா மீது ஹௌதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்களுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் பொருளாதார உள்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்ட, பிராந்திய ஸ்திரத்தன்மையை சீர்குலைத்து, கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ள இத்தகைய தாக்குதல் ஏற்றுக் கொள்ள முடியாதவை என தெரிவித்துள்ளது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved