Also Watch
Read this
By: Manigandan Raja

பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல் பகுதியில் புனித வேளாங்கண்ணி ஆலயம் அமைந்துள்ளது. இதில் புனித வெரோனிக்காள் அன்பியம், புனித அந்தோனியார் ஆலயத்தின் 20 ஆம் ஆண்டு கெபி திறப்பு விழாவானது சமூக சேவகர் ஏ. தேவதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் அருட்பணி பாலசாமி திருப்பலியில், அருட்தந்தை அந்தோணி இருதயராஜ் அவர்களால் கொடியேற்றப்பட்டு அதன் பின்பு சிறப்பு திருப்பலிகளும் நடந்தன.

இதில் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு வேளாங்கண்ணி மாதாவை தரிசித்தனர். அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித வேளாங்கண்ணி மாதாவை இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் ஆலயம் அமைந்துள்ள பூவிருந்தவல்லி சாலை இருபுறமும் ஊரை சுற்றி வலம் வந்தது ஊர்வலத்தில் திரளானோர் பங்கேற்று குடும்பம் குடும்பமாக வந்து புனித வேளாங்கண்ணி மாதாவை வழிபாடு செய்தனர்.
இந்த விழாவில் கலந்து கொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவருக்கு பிரியாணி இரவு உணவாக வழங்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved