news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

சஞ்சய்க்கு மனமார்ந்த நன்றி..நடிகர் சந்தீப் கிஷன்

ஜாலியான திரைப்படம்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சந்தீப் கிஷன்

நடிகர் சந்தீப் கிஷன் நெகிழ்ச்சியடைஞ்சிருக்காரு.

நடிகர் சந்தீப் கிஷன் தூக்கத்துல கூட இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேரைத்தான் சொல்றாராம். சிக்மா படத்தோட ஒரு மீட்ல, என்னோட இயக்குநரும் நெருங்கிய நண்பருமான சஞ்சய்க்கு மனமார்ந்த நன்றி தெரிவிச்சுருக்கிறேன்னு திரும்பவும் நடிகர் சந்தீப் கிஷன் சொல்லியிருக்காரு.

வீட்டுல வாங்கி தர 5 ஸ்டார் ஹோட்டல் பீட்சாவுக்குப் பதிலாக, சொந்த உழைப்புல கையேந்தி பவன்ல கிடைக்குறது போதும்ன்னு சஞ்சய் தனக்கான அடையாளத்தை உருவாக்கிட்டு ஒரு டைரக்டரா வந்துருக்காரு.

‘Sigma’ Gen-Zக்களுக்கான ஜாலியான திரைப்படம். நினைச்சா சஞ்சய் எந்த நடிகருடனும் பணியாற்றியிருக்கலாம். ஆனால், என்னைத் தேர்வு செஞ்சு நடிக்க வாய்ப்பு கொடுத்ததுல நான் ரொம்ப பெருமைப்படுறேன்னு நடிகர் சந்தீப் கிஷன் நெகிழ்ச்சியடைஞ்சிருக்காரு.

”எனக்கு ஆணவம் இருக்கு” கார்த்திக் சுப்புராஜுக்கு இளையராஜா பதில்

கே. பாலச்சந்தர் சார், பாரதிராஜா சார் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்களின் படங்களுக்கு இசையமைச்சு இருக்கீங்க. என்னைப் போன்ற ‘சுள்ளான்’ இயக்குநர்களுக்கும் எப்படி இசையமைக்கிறீங்கன்னு இளையராஜாகிட்ட இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கேள்வி கேட்டுருக்காரு. அதுக்கு பதில் சொன்ன்ன இசைஞானி புதிய இயக்குநர்களுக்கு இசையமைக்க வேண்டும் என்பதுதான் என்னோட நோக்கம். ஏன்னா, புதிய இயக்குநர்கள் காலி பாத்திரங்களைப் போன்றவர்கள்.

பாத்திரம் காலியாக இருந்தால் தான் அதுல எதாச்சும் ஊத்தலாம்ன்னு சொல்லியிருக்காரு. அதுமட்டும் இல்லாம புதிய இயக்குநர்கள் ஒரு கதையோட வந்து, ‘இப்படி இசையமைக்கனும், அப்படி இசையமைக்கனும்னு சொல்லுவாங்க. ஆனால் நான் அதை கேட்க மாட்டேன். ஏன்னா, இசையை மதிப்பிடும் தரத்தையே அவங்களுக்கு கொடுத்தது என் இசைதான்னு சொல்லியிருக்காரு. என் இசையைத் தாண்டி உங்களால் சிந்திக்க முடியாது.

உங்கள் விரல் நுனிகள்ல நிறைய இசை இருக்கலாம். ஆனால் அது என்னுடைய இசையைப் போன்றதா? என்னையே நீங்கள் சோதிக்க முடியாது. இதை நான் ஆணவமாகச் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். இசை எனது அளவுக்கு வேறு யாரிடமும் இல்லை என்பதால், இதை ஆணவத்துடனேயே சொல்றேன்னு இசைஞானி பதில் கொடுத்தாரு.

திருமணம் செய்யாமலேயே மகிழ்ச்சியாக வாழ முடியும்.!

திருமணம் செஞ்சிக்காம மகிழ்ச்சியா வாழ முடியும்ன்னும், வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கறதே முக்கியம்ன்னும் நடிகை திவ்யா ஸ்பந்தனா சொல்லியிருக்காங்க. தமிழில் ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் குத்து படத்தின் மூலம் அறிமுகமானவர் திவ்யா ஸ்பந்தனா (ரம்யா).

அதனை தொடர்ந்து பொல்லாதவன், வாரணம் ஆயிரம் ஆகிய படங்களில் இவரோட நடிப்பு ரசிகர்களால பெரிதும் கொண்டாடப்பட்டுச்சு. பிறகு காங்கிரஸ்ல சேர்ந்து அரசியல்வாதியாவும் வலம் வந்தாங்க, கூடவே சமூக வலைத்தளங்கள்ல தன்னோட தனிப்பட்ட வாழ்க்கை, எதிர்காலத்தைப் பத்தி வெளிப்படையான கருத்துக்களை பதிவு செஞ்சும் வந்தாங்க.


இந்த நிலையில் திருமணத்தைப் பத்தி பேசியிருக்கற திவ்யா ஸ்பந்தனா கல்யாணம் மட்டுமே ஒருவரின் அடையாளத்தை தீர்மானிப்பதில்லைன்னும், திருமணம் செஞ்சுக்காமலும் மகிழ்ச்சியா வாழ முடியுன்னும் சொல்லியிருக்காங்க.

நல்ல நட்பு, ஒரே மாதிரியான சிந்தனை மற்றும் ஆழமான புரிதல் இருந்தால் திருமணம் ஒரு நல்ல முடிவாக இருக்கும். ஆனால், எனக்கு பொருத்தமான நபரை நான் இன்னும் சந்திக்கலைன்னும் சொல்லியிருக்காங்க.

Related Link
முதலமைச்சர் விஜய்- த்ரிஷா உறவு குறித்த விமர்சனம்

முதலமைச்சர் விஜய்- த்ரிஷா உறவு குறித்த விமர்சனம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆசிய டி20 கிரிக்கெட் போட்டிகள் உலகளாவிய ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றுவது யார்?

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved