news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews
tv

Also Watch

இந்தியா-ஜப்பான் மோதும் நட்புறவு டி-20 கிரிக்கெட் போட்டி

ஜப்பான் கிரிக்கெட் சங்கம்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
டி-20 கிரிக்கெட்

அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்ததாக அறிவிப்பு

இந்தியா-ஜப்பான் நாடுகளில் 75 ஆண்டுகால உறவை கொண்டாடும் விதமாக நடத்தப்படும் டி-20 கிரிக்கெட் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக ஜப்பான் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இரு அணிகள் மோதும் ஒரு டி-20 போட்டி வரும் 22ஆம் தேதி ஜப்பானின் டோச்சிகி மாகாணத்தில் உள்ள சனோ சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.

வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடர்

வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் இந்தியாவின் பிரனாய் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்று ஆட்டத்தில் சக நாட்டு வீரரான சன்ஸ்கார் சரஸ்வத்துடன் பிரனாய் பலப்பரீட்சை நடத்தினார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரனாய், 28 க்கு 26 மற்றும் 21 க்கும் 12 என்ற செட் கணக்கில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றார்.

மைதானத்தில் சிறப்பு ஒதுக்கீடு கிடையாது - கங்குலி

2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான டிக்கெட் விநியோகம் பிசிசிஐ மூலம் தீர்மானிக்கப்பட்டு மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறினார்.

மைதான ஒப்பந்தத்தின்படி கௌரவ உறுப்பினர்கள் அல்லது வேறு எந்தப் பிரிவினருக்கும் சிறப்பு ஒதுக்கீடோ அல்லது முன்னுரிமையோ அளிக்கப்படாது எனவும் கங்குலி திட்டவட்டமாக கூறினார்.

Related Link
இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved