Also Watch
Read this
By: Manigandan Raja

பல்வேறு கிரிக்கெட் விவகாரங்கள் குறித்து விவாதம்
லண்டன் சென்ற மகாராஷ்டிர துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அங்கு இந்திய கிரிக்கெ அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை சந்தித்து பல்வேறு கிரிக்கெட் விவகாரங்கள் குறித்து விவாதித்தார். முன்னதாக விராட் கோலிக்கு ஏக்நாத் ஷிண்டே பொன்னாடை போர்த்தியும், பூங்கொத்து கொடுத்தும் மரியாதை அளித்தார்.
இந்தியா-ஆப்கானிஸ்தான் மோதும் டி-20 தொடர்
இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் டி-20 தொடரின் முதல்போட்டி 13ஆம் தேதி நடைபெறும் நிலையில், பயிற்சி இடைவெளியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பட்டம் விட்டு மகிழ்ந்தனர். இளம் வீரர்கள் சிவம் துபே மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் பட்டம் விட்டு மகிழும் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. முதல் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது.

கவுண்டி கிரிக்கெட் தொடர் - குல்தீப் யாதவ் அசத்தல்
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட் ((county cricket )) தொடரில் 10 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த இந்திய வீரர் குல்தீப் யாதவ்-க்கு, இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார். யோர்க்சிர் ((Yorkshire)) கிளப் அணிக்காக விளையாடி வரும் குல்தீப், எஸ்ஸக்ஸ்((Essex )) கிளப் அணிக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டும், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved