news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

விநாயகர் கோயில் திருக்கல்யாணம் வெகுவிமரிசை

தஞ்சாவூர் கும்பகோணம்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
விநாயகர் கோயில்

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலின் இணைக் கோயிலான கும்பகோணம் அருகே உள்ள புகழ்பெற்ற விநாயகர் ஸ்தலமாக போற்றப்படும் திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர்
கோயில் என்று அழைக்கப்படும் சுவேத விநாயகர் கோயிலில், மூலவர் வெள்ளை விநாயகர் இந்திரனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமை கொண்டது.

இந்த திருக்கோயிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா பத்து நாட்களுக்கு கொடியேற்றத்துடன் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா கடந்த ஆறாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது விநாயகர் சதுர்த்தி விழாவில் நிகழ்ச்சிகளில் ஒன்றான 7ஆம் நாள் திருவிழாவாக உற்சவர் வாணி கமலாம்பிகை சமேத சுவேத விநாயகர், சுவாமி சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருள நாதஸ்வர மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீ வாணி, கமலாம்பிகா சமேத சுவேத விநாயகர் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது இதனை தொடர்ந்து பூர்ணாஹூதி செய்யப்பட்டு மகா தீபாராதனை 16 வகையான சோடச உபசாரங்கள் நடைபெற்றது அதனை தொடர்ந்து பஞ்ஜாரத்தி செய்யப்பட்டது.

இத்திருக்கல்யாண வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Link
இன்றைய ராசிபலன் 12092026

இன்றைய ராசிபலன் 12092026

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டவரின் வீட்டில் சோதனை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved